நடிகர் கார்த்திக்கு ஜாேடியாக நடிக்கும் பிரபல விஜய் டிவி சீரியல் கதாநாயகி: யார் தெரியுமா?
பிரேம் குமார் இயக்கும் கார்த்தியின் 27வது படத்தில் அவருக்கு ஜோடியாக விஜய் டிவி சீரியல் நடிகை நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி, பருத்தி வீரன் படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். அதன்பின் படிப்படியாக உயர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார்.
சமீபத்தில் கார்த்தி நடிப்பில், கடந்த 10ஆம் தேதி ஜப்பான் படம் வெளியானது. இது, அவரது 25வது படமாகும். இந்த படத்தை ராஜூ முருகன் இயக்கியிருந்தார்.
நடிகர் கார்த்தி, தற்போது தொடர்ந்து 4-5 படங்களில் கமிட் ஆகியுள்ளார். அதில் ஒரு படத்தை பிரேம் குமார் இயக்குகிறார். இவர், 2018ல் வெளியான ‘96’ படத்தை இயக்கியவர். இந்த படத்திற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
கார்த்தியின் இந்த 27வது படத்தை அவரின் அண்ணன் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.
மேலும், கார்த்தியின் இந்த 27வது படத்தில் அவருக்கு ஜோடியாக ஒரு சீரியல் நடிகை நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
யார் அந்த சீரியல் நடிகை?
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் மிகவும் பிரபலமான தொடராக ஒளிபரப்பாகி வருவது, ஈரமான ரோஜாவே 2.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் பிரியா எனும் கதாப்பாத்திரத்தில் ஸ்வாதி என்பவர் நடிக்கிறார். இவர்தான், தற்போது கார்த்திக்கு ஜோடியாக படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |