குடும்பத்துல ஒருத்தர் இறந்தும் எப்படி விழா கொண்டாட முடியுது... விஜயகுமாரின் குடும்பத்தை கிழித்தெடுத்த வனிதா!
சர்ச்சைக்கு பெயர் போனவர் என்றால் அது வனிதா விஜயகுமார் தான். இவரைப்பற்றி அன்றாடம் ஏதாவது ஒரு தகவல் வெளிவராமல் இருந்ததே இல்லை.
அந்த வகையில், தற்போது தன்னுடைய குடும்பத்தினர் தன்னிடம் பேசாததே நல்லது என்று வனிதா உருக்கமான பதிவை போட்டுள்ளார். குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வரும் ஆயுத பூஜையை முன்னிட்டு வனிதா, தன் இன்ஸ்டா பக்கத்தில் இரங்கல் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், விஜயகுமாரின் சகோதரரின் மகளான இந்திராவின் கடைசி மகளான அனிதா என்ற 20 வயது பெண் சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 4-ம் தேதி காலமாகி கடந்த காலமாகி இருக்கிறார்.
இதற்கு வனிதாவின் பதிவில், அனிதா தனக்கு எப்போதும் ஆதரவாக இருந்து வந்ததாகவும் அவர் அக்டோபர் நடுவில் தன்னுடன் வந்து இரண்டு மாதங்கள் தங்க திட்டமிட்டு இருந்ததாகவும் கூறி இருக்கிறார்.
மேலும் திட்டமிட்டு இறந்து 16 நாள் கழித்துத்தான் இந்த செய்தியை தனக்கு தெரியும் என்றும் அக்டோபர் 8-ம் தேதி கூட அவருக்கு தான் மெசேஜ் செய்ததாகவும். ஆனால் அவர் 4-ம் தேதியை இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டு தான் மிகவும் அதிர்ச்சி அடைந்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இதனால் நான் என்னுடைய நவராத்திரியை கூட கொண்டாடவில்லை. ஆனால் என்னுடைய சகோதர சகோதரிகள் போல ஒரு குழந்தை இறந்த கொஞ்ச நாட்களிலேயே நகை புடவை எல்லாம் கொஞ்ச நவராத்திரி கொண்டாடுவது பிறந்தநாள் கொண்டாடுவதோ என்னால் தாங்க முடியவில்லை.
இது மிகவும் மனிதாபமற்ற செயல். இந்த போலியான குடும்பம் என்னுடன் இருக்கவில்லை என்று நினைக்கையில் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.