லியோ படத்தில் மகனைப் பார்த்த வனிதாவின் ரியாக்ஷன்... வைரலாகும் பதிவு
நடிகை வனிதா தனது மகனின் புகைப்படம் லியோ படத்தில் வந்திருந்த புகைப்படத்தினை ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்த நிலையில், அதனை தனது பக்கத்தில் ஷேர் செய்து நெகிழ்ச்சியான கருத்தை பதிவிட்டுள்ளார்.
நடிகை வனிதா
தமிழ் திரையுலகில் சினிமா குடும்பத்தின் பின்புலத்தில் இருந்து வந்த நடிகை வனிதா தனது பெற்றோர், உறவினர்களை விட்டு பிரிந்து தனது இரண்டு பெண் குழந்தைகளையும் பார்த்து வருகின்றார்.
இவரது மகன் ஸ்ரீஹரி அவரது தந்தையுடன் இருந்து வருகின்றார். வனிதா சண்டையிட்டு குடும்பத்தை பிரியும்போது ஸ்ரீஹரி குழந்தையாக இருந்தார்.
தற்போது படங்களில் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு அட்டகாசமான அழகுடன் வளர்ந்துவிட்டார். இந்நிலையில் இவரது புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் கருத்தை பெற்று வருகின்றது.
இந்நிலையில் லியோ படத்தில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி வந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விஜய்யின் லியோ
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக வசூலில் சாதனை செய்து வருகின்றது.
தான் ‘லியோ’ இல்லை என்று அர்ஜுனிடம் விஜய் கூறும் காட்சியில், ஒரு சில புகைப்படங்களை காண்பிப்பார்.
அப்போது அவர் தன்னுடைய மகனின் முதல் பிறந்தநாளின் போது எடுத்த புகைப்படத்தை காண்பிப்பார்.
அந்த புகைப்படத்தில் விஜய்யின் ஒரு வயது மகனாக இருப்பது வனிதாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வனிதா தன்னுடைய சமூக வலைதளத்தில் ’என்னுடைய மகன் தான் விஜய்யின் மகனாக ’லியோ’ படத்தில் நடித்துள்ளார், அதை நான் பெருமையாக கருதுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |