ரஜினிக்கு மகளாகும் வனிதா.. வாய்ப்பை பறித்த தங்கை- கடைசியாக கூறிய உண்மை
“ரஜினிகாந்திற்கு மகளாக நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. அதனை தான் என்னுடைய தங்கை நடித்தார்..” என நடிகை வனிதா விஜயகுமார் பேசியது இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
வனிதா விஜயகுமார்
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” படத்தில் மூலம் என்றி கொடுத்தவர் வனிதா விஜயகுமார்.
இதனை தொடர்ந்து பெரியளவில் படங்கள் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
நீண்ட நாட்களுக்கு பின்பு கணவரை விவாகரத்து செய்துவிட்டு அடுத்தடுத்து 2 திருமணங்கள் செய்து சர்ச்சை நாயகியாகவே மாறி விட்டார்.
தற்போது சினிமா, சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என வனிதா பிஸியாக இருந்து வருகிறார்.
மகளாக நடிக்க வாய்ப்பு
இந்த நிலையில், தற்போது சொந்த தயாரிப்பில் படங்கள் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான Mr & Mrs திரைப்படம் பெரியளவு வரவேற்பை பெற வில்லை.
இருந்தாலும், நடிகை வனிதா சர்ச்சைகளை கிளப்புவதில் மிகுந்த ஆர்வத்துடன் இயங்கி வருகிறார்.
அந்த வகையில், “ படையப்பா படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடிக்க வனிதாவுக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அதனை நான் மறுத்துவிட்டேன். அதன் பின்னர் தான் ப்ரித்தாவிற்கு வாய்ப்பு கொடுப்பட்டது.” என பேசியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அத்துடன் செய்தி பார்த்த பலரும், “ அடுத்தடுத்து என்னென்ன வரவிருக்கிறது?“ எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |