பிக் பாஸ் வீட்டில் ஜோவிகா அடிக்கடி தூங்குவதற்கு இது தான் காரணமாம்...! வனிதாவின் அசத்தலான விளக்கத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி
பிக்பாஸ் வீட்டில் தனது மகள் அடிக்கடி தூங்குவதற்கான காரணத்தை வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ளார். இவர் கூறியுள்ள காரணம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.
பிக்பாஸ்
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிதான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. சின்னத்திரை தொடர்களை விட, இந்த நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, ஆரம்பித்த முதல் நாளில் இருந்து இந்த நாள் வரை சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபல்யம் ஆன வனிதா விஜயகுமார் , தற்போது தன் மகளையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறக்கி உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் புலி போல சீறிப் பாய்ந்த ஜோவிகா, தற்போது இருக்கும் இடம் தெரியாமல் மிகவும் அமைதியான முறையில் விளையாடி வருகிறார்.
குறிப்பாக முதல் வாரத்தில் கல்வி விவகாரத்தில்
பிக் பாஸ் சீசன்7 ஆரம்பத்தில் விசித்ராவுக்கும் ஜோவிகாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இணையத்தில் புதிய புயலையே கிளப்பியது.
பின்னர் அடுத்தடுத்த வாரங்களில் இவரின் ஆட்டம் திசை மாறி சென்றுவிட்டது. குறிப்பாக மாயாவின் குழுவில் சேர்ந்த பின்னர் ஜோவிகாவின் ஆட்டம் சுத்தமாக இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது.
மகளை எப்படியாவது மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரும் முனைப்பில் ‘சிங்கம் சிங்கிளா தான் வரும்’ என்கிற வாசகம் அடங்கிய டீசர்ட்டை அனுப்பி குரூப் சேராமல் தனியா விளையாடும்படி வனிதா விஜயகுமார் மறைமுகமாக கூறியிருந்தார்.
ஆனால் அதன்பின்னர் ஜோவிகா செய்யும் வேலைகள் அனைத்தும் மீம் டெம்பிளேட் ஆக மாறி உள்ளன. சிங்கிளாக இருக்க சொன்னால் அவர் சிங்கிளாக தூங்கி வழிகிறார். தினமும் சாப்பிட்டு தூங்குவதையே வேலையாக வைத்துள்ளதாக ஜோவிகாவை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
அடிக்கடி தூங்குவது ஏன்?
இந்நிலையில், தன் மகள் அடிக்கடி தூங்குவது ஏன் என்பது குறித்து வனிதா விஜயகுமார் புது விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார்.
“நானும் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன். அவள் மன உளைச்சலில் இருப்பதால் தான் இப்படி தூங்கி வருகிறார். 2 வாரங்களாகவே அவளுக்கு கெட்ட கனவு வந்ததில் இருந்தே ரொம்ப பாதிச்சு இருக்கா.
அந்த வீட்டில் இருக்கும்போது மன அழுத்தமோ, மன உளைச்சலோ ஏற்பட்டால் தூக்கம் தான் வரும். எனக்கு தெரியும், எனக்கும் இந்த மாதிரி ஆகிருக்கு. நம்மளையே அறியாம நாம் தூங்கிருவோம்” என வனிதா கூறிய காரணத்தை கேட்டு ரசிகர்கள் அதிர்சியில் உள்ளனர்.
வனிதாவின் இந்த சம்பந்தம் இல்லாத புதிரான விளக்கம் தற்போது இணையத்தில் மற்றுமொரு தரமாக சம்பவத்துக்கு வித்திட்டுள்ளதுடன் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்சையை கிளப்பியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |