ஹீரோயினை மிஞ்சிய அழகில் வனிதாவின் மகள்... வைரலாகும் புதிய புகைப்படம்
நடிகை வனிதாவின் மூத்த மகள் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகின்றது.
நடிகை வனிதா
தமிழ் திரையுலகில், மூன்று தலைமுறைகளாக நடித்து கொண்டிருக்கும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதிகளின் மூத்தமகள் தான் நடிகை வனிதா.
குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்த இவர், பின்பு விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பின்பு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள் உள்ள நிலையில் அவரைப் பிரிந்தார். இதில் மகன் ஆகாஷிடமும், மகள் வனிதாவுடன் இருந்து வருகின்றனர்.
பின்பு இரண்டாவது திருமணம், ராபர்ட் மாஸ்டருடன் வாழ்க்கை, அடுத்து ஒரு திருமணம் என்று பல சர்ச்சைகளில் சிக்கிய இவர், பிரபல ரிவியில் ஒளிபரப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதன்பின்பு குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், பிபி ஜோடியில் ரம்யாகிருஷ்ணனிடம் வாக்குவாதம் செய்துவிட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
தற்போது சினிமாவில் பயங்கர பிஸியாக நடித்து வரும் வனிதா அவ்வப்போது தனது மகள்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
ஹீரோயினை மிஞ்சிய மகள்
வனிதா சினிமாவில் பிஸியாக இருப்பதால் அவர் நடத்தி வந்த யூடியூப் சேனலை மகள் ஜோவிகா நடத்தி வருகின்றார். வனிதாவின் சமையல் திறமை இவரிடம் அச்சுஅசலாக காணப்படுகின்றது.
இந்நிலையில் வனிதாவின் இரண்டு மகள்களும் ஹீரோயினை மிஞ்சிய அழகில் காணப்படுகின்றனர். அதில் தற்போது ஜோவிகாவின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
வெள்ளை நிற உடையில் எந்தவொரு மேக்கப் இல்லாமல் இருக்கும் ஜோவிகாவின் புகைப்படம் லைக்ஸை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |