முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுத்த வாணி போஜன்! வெளியிட்ட காணொளியை பாருங்க
நடிகை வாணி போஜன் கருப்பு நிற புடவையணிந்து வெளியிட்டுள்ள காணொளி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.
நடிகை வாணி போஜன்
பிரபல ரவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் நடித்த வாணி போஜன் தற்போது மிகவும் பிஸியாக வலம் வருகின்றது.
ஆம் சீரியல் நடிகையாக வாழ்க்கையை துவங்கிய இவர் தற்போது கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு நல்ல கதைகளை கொண்ட படங்களை தெரிவு செய்து நடித்து வருகின்றார்.
இவர் கதாநாயகியாக மட்டுமின்றி குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகின்றார். இவரும் அவ்வப்போது கிசுகிசுவில் மாட்டிக்கொண்டு வருகின்றார்.
பிரபல நடிகர் ஜெய் உடன் காதல் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வாணி போஜன் கருப்பு நிற புடவையில் அனைவரையும் வாயடைக்கும் விதமாக காணொளியினை வெளியிட்டுள்ளார்.
இதில் ஹைலைட் என்னவெனில் இவர் வெளியிட்ட காணொளிக்கு பின்னே மோகன் ராதிகா நடித்த இரட்டை வால் குருவி திரைப்படத்தின் ராஜ ராஜ சோழன் நான் என்ற பாடல் ஒலிக்கின்றது.