செல்லப்பிராணிகளின் நடமாடும் சலூன் வைரலாகும் புகைப்படங்கள்...
லூதியானாவில் புது முறையாக செல்லப்பராணிகளை அழகுபடுத்துவதை தனித்துவமாக கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் அளவில் ஒரு நபர் தன் தொழிலை தொடங்கியுள்ளார்.
வைரல் புகைப்படம்
பொதுவாக செல்லப்பிராணிகளை அழகுபடுத்துவதற்காக அதனை நாம் கொண்டு செல்வது வழக்கம். இந்த முறையை ஒரு நபர் லூதியானாவில் வேன் ஒன்றில் அவரே வீட்டிற்கு சென்று அழகுபடுத்தும் நடமாடும் முறையை கையாண்டுள்ளார்.
இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. இதை சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு நபர் பகிர்ந்துள்ளார். இது சொல்லப்போனால் முதலீடு குறைவாக இருக்கும் ஒரு அருமையான தொலிலை இந்த நபர் மெற்கொண்டுள்ளார்.
இந்த வேனில் ஷாம்பூ, பிரஷ், க்ளிப்பர், ட்ரையர் என சலூனுக்கு தேவையான அனைத்து கருவிகளும் செல்லப் பிராணிகளை அழகுபடுத்தும் பொருட்களும் உள்ளதாகவும் அவர்கூறியுள்ளார்.
Business ideas with low capital, no need of funding, cash payment, luxury segment, high demand, no need of tech. pic.twitter.com/ZP7ikkbwx5
— Akshay (@Ajain112) April 27, 2024