பாக்கியராஜ் கடைசி ஆசை என்ன தெரியுமா? நிறைவேற்றிய வைரமுத்து
இயக்குநரும், நடிகரும், கதாசிரியருமான பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இந்த நிலையில் அவருடைய கடைசி ஆசையை வைரமுத்து நிறைவேற்றி உள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குநர் என்றால் அது பாக்கியராஜ் தான். இவர், தன்னுடைய 73வது வயதில் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருடைய இறப்பு, தமிழ் திரையுலகிற்கே பெரும் வேதனையை தந்தது. இந்த நிலையில் இவருடைய கடைசி ஆசை குறித்த ஒரு பதிவை கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ், ஜூன் 27ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். வாக்கிங் சென்றபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். இவருடைய இழப்பிற்கு பலரும் தங்களுடைய அஞ்சலியை நேரில் சென்று கொடுத்தனர்.
17.06.2026 அன்று
— வைரமுத்து (@Vairamuthu) July 6, 2026
‘படிச்சாப் புடிச்சிர்லாம்’ என்ற
தன் சுயசரிதை நூலை
எனக்குத் தந்தனுப்பி
'முன்னுரை எழுதிக்கொடுங்கள்'
என்று பாசத்தோடு கேட்டார்
பாக்யராஜ்
‘கொஞ்சம் அவகாசம்
கொடுங்கள்’ என்றேன்
‘சரி’ என்றார்
27.06.2026 அன்று
அவர் மறைவுற்றார் என்றசெய்தி
என்னை நிலைகுலைய வைத்தது… pic.twitter.com/vaZSHBMsbh
இந்த நிலையில் இயக்குநர் கே. பாக்யராஜ் தனது சுயசரிதை நூலுக்கு முன்னுரை எழுதுமாறு கவிஞர் வைரமுத்துயிடம் கேட்டிருந்தாராம். ஆனால் அந்த முன்னுரையை முடிப்பதற்குள் பாக்யராஜ் மறைந்துவிட்டாராம். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், வைரமுத்து அந்த முன்னுரையை எழுதி பாக்யராஜின் மனைவி பூர்ணிமாவிடம் நேரில் சென்று வழங்கியதாக தனது எக்ஸ் பதிவில் தற்போது தெரிவித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |