பவதாரணி மறைவை ஏற்றுக்கொள்ள முடியாமல் கதறும் வடிவேலு: தடுமாறிய குரலுடன் வெளியான பதிவு
"இளையராஜாவின் மகள் பவதாரிணியின் மறைவு செய்தி அறிந்து கதறி அழுதுவிட்டேன்.." என நடிகர் வடிவேலு பேசியது குரல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பவதாரணி
தமிழ் சினிமாவிலுள்ள பிரபல பாடகிகளில் ஒருவர் தான் பவதாரணி, இவர் இளையராஜாவின் மகளும் யுவன் சங்கர் ராஜாவின் அன்பு அக்காவும் ஆவார்.
தேசிய விருதை கைவசமாக வைத்திருக்கும் பவதாரணி 30ற்கு மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
அத்துடன் 10 ற்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இதனை தொடர்ந்து கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரணி இலங்கை -கொழும்பு வைத்தியசாலையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இரங்கல் குரல் பதிவு
இந்த நிலையில் பல பிரபலங்கள் இறப்பிற்கு மறந்தும் இரங்கல் தெரிவிக்காத வடிவேலு பவதாரணியின் இறப்பு செய்தி கேட்டு குரலொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தைப்பூச நாளில் தங்கை பவதாரணி உயிரிழந்த நிலையில், அந்த முருகப்பெருமானுடைய காலடியில் போய் தான் அந்த தங்க மகள் ஐக்கியமாகியிருப்பார்.
அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் இளையராஜா அண்ணன் மனம் தைரியமாக இருக்க என்னுடைய குலதெய்வம் அய்யனார், கருப்புசாமி என எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொள்கிறேன். இதுக்கு மேல என்னால பேச முடியல..” என கவலையாக பேசியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |