கலைஞர் 100விழாவில் வடிவேலு...விளாசி தள்ளும் நெட்டிசன்கள்
நடிகரும் தேமுதிக அரசியல் கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் இழப்பு தமிழகம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது.
விஜயகாந்தின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் கட்சி அலுவலகத்தில் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தங்கள் படங்களுக்கான ஷூட்டிங் இருந்தபோதும் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல், தளபதி விஜய், விஜய் ஆண்டனி போன்ற பல முன்னணி நடிகர்கள் நேரில் வந்து தங்கள் இரங்கல்களை கேப்டனுக்கு செலுத்தினர்.
ஆனால் விஜயகாந்த் அவர்களின் படங்கள் மூலம் புகழ் பெற்ற வைகை புயல் வடிவேலு மாத்திரம் இறுதிவரை அவர் பூத உடலை பார்க்க வரவில்லை, ஏன் தனது சமூக வலைதள பக்கங்களில் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் இறந்து இரண்டு வாரத்திற்கு மேலாகிவிட்ட நிலையில், சரத்குமார், சூர்யா, சிவகார்த்திகேயன் என ஒருவர் ஒருவராக விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்து வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றனர்.
கலைஞர் 100விழாவில் வடிவேலு
ஆனால், நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது வாழ்க்கையின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவரை இதுவரை அஞ்சலி செலுத்தாதது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் கலைஞர் 100விழாவில் அவர் கலந்து கொண்டமை இணையத்தில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல், சூர்யா, கார்த்தி,தனுஷ்,பார்த்திபன், யோகி பாபு,வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரோகினி, வடிவேலு ஆகியோர் கலந்து கொண்டு கலைஞரை புகழ்ந்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் வடிவேலு கலந்து கொண்டமை இணையதள வாசிகளை மீண்டும் ட்ரோல் செய்ய தொடங்கி உள்ளனர்.
இணையத்தில் ஒரு நெட்டிசன், இறப்பிற்கு வர முடியல இதுக்கு மட்டும் வர தெரியுதா? என்றும் ஒருத்தர் வீட்டு நல்ல காரியத்திற்கு போகவில்லை என்றால் கூட கெட்ட காரியத்திற்கு கட்டாயம் போக வேண்டும் என்று ஊருக்குள் சொல்வாங்க, துணி மணி எடுத்து கொடுத்து வளர்த்து ஆளாக்கியவர் இறப்புக்கு போக உங்களுக்கு மனசு வரவில்லையா என அடுத்தடுத்து கேள்விகளை கேட்டுவருகின்றமை குறிபப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |