இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான வடகறி - ஹோட்டல் சுவையில் செய்வது எப்படி?
வடகறியை பலரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும். இட்லி, இடியாப்பம், ஆப்பத்திற்கு தொட்டுக் கொள்ள இவை சுவையை மேம்படுத்தும்.
ஒரு சில வீடுகளில் எல்லாம் இட்லி மட்டும் வீட்டில் ரெடி செய்துவிட்டு வடகறியை ரோட்டு ஓரம் உள்ள கடைகளில் வாங்கிக்கொள்வார்கள்.
அதே சுவையுடன் கூடிய ரோட்டுக்கடை வடகறியை நாமும் எப்படி வீட்டிலேயே செய்வது? எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கல்லை பருப்பு 200கிராம் பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன் காஞ்ச மிளகாய் 5 சோம்பு அரை டீஸ்பூன்
செய்முறை விளக்கம்
முதலில் வடைக்கு தேவையான கடலைப் பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். கடலைப் பருப்பு நன்கு ஊறியதும் தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள்.
அதோடு பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், சோம்பு, தட்டிய இஞ்சி, கருவேப்பிலை பின்னர் அதற்கு தேவையான உப்பு கலந்து ஒன்றும் இரண்டுமாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
வடை சாப்பிடும் பொழுது ஆங்காங்கே பருப்புகள் தட்டுபட வேண்டும், எனவே ரொம்ப நைசாக அரைக்க கூடாது. அரைத்து எடுத்த மாவுடன், ஒரு கைப்பிடி அளவிற்கு சின்ன வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.
கொஞ்சம் மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் சிறு சிறு உருண்டைகளாக தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள்.
அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை மீடியமாக வைத்துக் கொண்டு ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து வடை போல தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
அனைத்து வடைகளையும் பொரித்து எடுத்த பின், சூடு ஆறிய பின்பு அதனை உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் ஒரு கப் தேங்காய் துருவலுடன், சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து தாளிக்க தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். சோம்பு, பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை ஆகியவற்றை தாளித்தம் செய்து, ஒரு கொத்து கறிவேப்பிலை, இடித்த இஞ்சி, நசுக்கிய பூண்டு பற்கள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பலரும் வேண்டாமென ஒதுக்கும் பொன்னாங்கண்ணி கீரையில் இத்தனை பயன்களா?
இவற்றை பச்சை வாசம் போக வதங்கியபின் ஒரு கைப்பிடி அளவிற்கு சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் வதங்கிய பின்பு தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி மசிய வதங்கிய பின்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அத்தோடு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மசாலா வாசம் போக கொதிக்க விடுங்கள். அதன் பிறகு உதிர்த்து வைத்துள்ள வடைகளை பாதி அளவிற்கு சேர்த்து வதக்க வேண்டும். மீதி வடைகளை இறுதியாக சேர்த்துக் கொள்ளலாம்.
நீர் சுண்ட வதக்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை ஊற்ற வேண்டும். தேவையான அளவிற்கு தண்ணீரை ஜாரில் ஊற்றி கழுவி இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
எந்த அளவிற்கு தண்ணீர் சுண்டி வடகறி கெட்டியான பதத்திற்கு வருகிறதோ, அந்த அளவிற்கு வடகறியின் சுவை அதிகரிக்கும். கிரேவி பதத்திற்கு சுண்டி எண்ணெய் தெளிய மேலே பிரிந்து வந்ததும், உதிர்த்து வைத்துள்ள மீதி வடைகளையும் சேர்த்து ஒரு கிளறு கிளறி சுட சுட இறக்கிப் பரிமாற வேண்டியது தான்.