அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய சீரியல் நடிகர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் வானத்தை போல சீரியல் நடிகர்கள் இருவரும் அடுத்தடுத்து வெவ்வேறு விபத்துகளில் சிக்கியுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விபத்தில் சிக்கிய சீரியல் பிரபலம்
பிரபல ரிவியில் கடந்த 2020ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியலான வானத்தைப் போல, அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சீரியல் ரசிகர்களிடையே நன்கு பிரபலமாகியுள்ள நிலையில், தற்போது சின்ராசு கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்ரீகுமாரும், துளசி கதாபாத்திரத்தில் மான்யா ஆனந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
சின்ராசுவின் குடும்ப பிரச்சனை இப்போது ஒரு வழியாக தீர்ந்து வந்தாலும், எப்போது துளசி உண்மையாக கர்ப்பமாக இல்லை என்கிற உண்மை தெரிய வரும? என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றனர்.
அதேபோல் துளசியை காதலித்த வெற்றியும், அடுத்தடுத்து என்னென்ன என்ன பிரச்சனை செய்வார் என்கிற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
இந்நிலையில் சீரியில் சின்ராசுவின் மாமா முத்தையா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் இயக்குனர் மனோஜ் குமார். இவர் குடும்பத்துடன் காரில் பயணித்த போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரும், அவரது குடும்பத்தினரும் மருத்துவமனைவியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல் சீரியலில் சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹீரோ ஸ்ரீகுமார் தீ விபத்தில் சிக்கி உள்ளார். சென்னை பாண்டி பஜாரில் சமீபத்தில் வணிக வளாகத்தில் நடந்த திடீர் தீ விபத்தின் போது நடிகர் ஸ்ரீகுமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடன் 70 வாடிக்கையாளர்களும் சிக்கியுள்ளார்களாம்.
எனினும் பெரிதாக எவ்வித அசம்பாவிதமும் நேராமல் அனைவருமே பத்திரமாக வெளியேறினார். இந்த விபத்தில் நடிகர் ஸ்ரீகுமார் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.