பாம்பு பிடிக்கும் போது தான் செய்த தவறு! இனி பாம்பு பிடிப்பேனா? கண்ணீருடன் வாவா சுரேஷ் கூறிய பதில்
பிரபல பாம்பு பிடி மன்னனான வாவா சுரேஷ் தான் செய்த தவறு குறித்தும், இனி தான் பாம்பு பிடிப்போனா என்றும் கண்ணீருடன் பதில் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் பல ஆயிரக்கணக்கான பாம்புகளை பிடித்துள்ளார்.
இந்நிலையில், கோட்டயம் அருகே குரிச்சியில் ஒரு வீட்டிற்குள் பதுங்கியிருந்த ராஜ நாகத்தினை பிடிக்க சென்ற வாவா சுரேஷை பாம்பு கடித்துள்ளது.
வாவா சுரேஷ் குறித்த பாம்பை பிடித்து பைக்குள் போடும் போது ஏற்பட்ட, திடீர் அசம்பாவிதத்தால் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வாவா சுரேஷ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
வாவா சுரேஷ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது அவர்களது உறவினர்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 'தான் உயிருடன் இருக்கும்வரை பாம்புகளை பிடிப்பேன். மிகுந்த கவனத்துடன் பணியாற்றுவேன்' என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி அன்று தான் செய்த தவறு என்னவெனில், பாம்பை அடைப்பதற்கு சாக்கை எடுக்கும் போது, கவனம் பாம்பின் மீது இல்லாமல் பையின் மீதே இருந்தது... அத்தருணத்தில் நொடிப்பொழுதில் தன்னை கடித்துவிட்டதாக கூறியுள்ளார்.
மேலும் தனது குடும்பத்தினைக் குறித்து கேட்கையில் கண்ணீர் சிந்திய வாவா சுரேஷ், தனக்காக பிரார்த்தனை செய்த உலக மக்கள் எல்லோருக்கும் தனது கண்ணீர் கலந்த நன்றியைக் கூறியுள்ளார்.