ஆக்ரோஷத்துடன் தாக்க கார் மீது பாய்ந்த புலி - அதிர்ச்சி வீடியோ வைரல்!
உத்தரகாண்டில் ஆக்ரோஷத்துடன் தாக்க கார் மீது பாய்ந்த புலியின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆக்ரோஷத்துடன் தாக்க கார் மீது பாய்ந்த புலி
சமூகவலைத்தளங்களில் வனவிலங்குகள் இருக்கும் பகுதிகளில் சுயநலம் கொண்ட மனிதர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது குறித்த பல வீடியோக்கள் நாம் பார்த்திருக்கிறோம்.
இந்நிலையில், உத்தரகாண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் சுற்றுலா வாகனத்தை நோக்கி ஒரு புலி கோபமாக சீறிப் பாயும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரியான சுசாந்தா நந்தா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், ஆத்திரமடைந்த புலி ஒன்று காருக்குள் இருந்த சுற்றுலாப் பயணிகளை உறுமுவதையும், பயமுறுத்துவதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
காரை புலி நெருங்கியபோது, சுற்றுலாப் பயணிகள் பயந்தனர். இதனையடுத்து டிரைவர் காரைப் பின்னோக்கிச் சென்றார். ஆத்திரமடைந்த புலி வாகனத்தை தாக்க முயற்சி செய்ததால் காரில் இருந்தவர்கள் அச்சத்தில் உறைந்தனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Striped monk gets irritated ?
— Susanta Nanda (@susantananda3) April 26, 2023
What will you do if at every designated hours people crash into your house as their matter of right? pic.twitter.com/4RDCVLWiRR