திடீரென உருண்டு புரண்டு கூச்சலிட்டு கதறிய மாணவிகள்; பள்ளியில் நடந்த வினோத சம்பவம்! பரபரப்பு வீடியோ
பள்ளி மாணவிகள் திடீரென கூச்சலிட்டு கதறி அழுத வினோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தி உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இதனிடையே கடந்த நாளின் போது வழக்கம் போல் பள்ளி செயல்படும் போது, மாணவிகள் திடீரென கூச்சலிட்டும், தரையில் உருண்டும், சத்தம் போட்டும் அழுதும் விநோதமாக நடந்துகொண்டுள்ளனர்.
இதைக்கண்ட பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின் அருகில் உள்ள பாதிரியாரை அழைத்து வந்து மாணவிகளை சாந்தப்படுத்த முயற்சி செய்தனர்.

ஆனாலும் மாணவிகள் தொடர்ந்து கத்தியும் கதறியும் அழுதுள்ளனர். வளாகத்திலேயே அங்கும் இங்குமாய் உருண்டுள்ளனர். அதன் பின் பள்ளியில் மருத்துவக்குழுவினர்கள் ஆய்வு செய்தனர்.
அதன்படி, பாகேஷ்வர் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய தங்களுடன் படித்த தோழி மூழ்கி உயிரிழந்த சம்பவத்தால் அதிலிருந்து மாணவிகள் மீண்டு வெளியே வரமுடியாமல் அதிர்ச்சியில் இருப்பதாகவும், இதனாலேயே இவ்வாறு செய்வதாகவும் மருத்துவ ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
மாணவிகள் இப்படி விநோதமாக நடந்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையே ஏற்படுத்தி இருக்கிறது.
Few students in a govt school in Bageshwar dist of #Uttarakhand on Wednesday suddenly started screaming and shouting. Some beleieve it's a "mass hysteria" phenomenon. A team of doctors will visit school today. pic.twitter.com/htsFjrcC0Y
— Anupam Trivedi (@AnupamTrivedi26) July 28, 2022