தெருநாய்கள் கடித்து குதறியதில் 65 முதியவர் பலி - அதிர்ச்சி வீடியோ
உத்திரப்பிரதேசத்தில் தெருநாய்கள் கடித்து குதறயதில் 65 முதியவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெருநாய்கள் கடித்து குதறியதில் 65 முதியவர் பலி
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்திரப்பிரதேசத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் 65 வயது முதியவர் காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர் பின்னால் வந்த தெருநாய் கூட்டம் அவரை கடிக்க பாய்ந்தது. நாய்கள் பிடியில் சிக்கிய அவரால் தப்பமுடியாமல் திணறினார்.
அந்த வழியாக யாரும் வராததால், அவரை காப்பாற்ற முடியவில்லை. தெருநாய் கூட்டம் அவரை கடித்து குதறி தும்சம் செய்தது. இச்சம்பவத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பலியானவர் நபர் சஃபாதர் அலி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Disturbing visual
— Arvind Chauhan (@Arv_Ind_Chauhan) April 16, 2023
A 65-year-old man on morning walk, was mauled to death by pack of stray dogs inside #Aligarh Muslim University Campus. The victim was identified as Safadar Ali.#StrayDogMenace #AMU #DogAttack pic.twitter.com/7sJHG5P88O