ஆம்புலன்ஸ் கிடைக்காததால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு தந்தையை தள்ளுவண்டியில் அழைத்துச் சென்ற மகன்கள்!
உத்திரப்பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு தந்தையை தள்ளுவண்டியில் அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தள்ளுவண்டியில் அழைத்துச் சென்ற மகன்கள்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
உத்தரபிரதேச மாநிலம், அலிகாரில் நோயால் பாதிக்கப்பட்ட தன் தந்தையை அழைத்து செல்ல மகன்கள் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸிற்கு போன் செய்துள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸ் கிடைக்காததால், பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சிறுவர்கள் கை வண்டியில் தன்னுடைய தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதை அவ்வழியே சென்றவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Watch: minor forced to take father to hospital on hand cart with no ambulance available in Aligarh, Uttar Pradesh.
— Ahmed Khabeer احمد خبیر (@AhmedKhabeer_) April 21, 2023
pic.twitter.com/uBVTOV355M