திருமண விழாவில் துப்பாக்கியால் சுட்ட மணமகள் தலைமறைவு - சோகத்தில் மணமகன்
உ.பி.யில் மணவிழாவில் துப்பாக்கியால் சுட்ட மணமகளை போலீசார் தேடி வரும் நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார்.
துப்பாக்கியால் சுட்ட மணமகள் தலைமறைவு
உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸ் நகரில் சலீம்பூர் பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் ஜோடியாக அமர வைக்கப்பட்டனர். பிறகு திருமணத்தில் உறவினர்கள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தார்கள்.
அப்போது, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒருவர் மணமகளுக்கு கையில் துப்பாக்கி ஒன்றை கொடுத்துள்ளார். இதை வாங்கிய மணமகள், என்ன ஏது என்று யோசிக்காமல், துப்பாக்கியை மேலே பிடித்தபடி, வானை நோக்கி 4 ரவுண்டு சுட்டார். அவரருகே அமர்ந்திருந்த மணமகன் அமைதியாக காணப்பட்டார். திருமணத்தில் இருந்தவர்கள் இதை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கண்டனங்களை தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த வீடியோ வைரலானவதையடுத்து, ஹத்ராஸ் ஜங்சன் போலீசார் மணமகள் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். இதனால், தேனிலவுக்கு செல்ல வேண்டிய மணமகள் தலைமறைவாகிவிட்டாரே என்று மணமகன் சோகத்தில் மூழ்கியுள்ளார்.
Hathras, U.P., 2023#WomenEmpowerment #ABLANARI
— Lady Of Equality ?? (@ladyofequality) April 9, 2023
Are Indians without a gun licence allowed to use guns @Uppolice @kpmaurya1 @myogiadityanath @dgpup @hathraspolice @dm_hathras ⁉️
Please investigate such incidents@NCMIndiaa @realsiff @Das1Tribikram @RajNgc @KirenRijiju pic.twitter.com/UFgJRgowWT