தாயை கடித்த பாம்பை பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு வந்த மகன்... - அதிர்ச்சி சம்பவம்
உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு விசித்திரமான சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாம்பை பிடித்து கொண்டு வந்த மகன்
உத்தரபிரதேச மாநிலம், மஹோபா மாவட்டம், சிஜாரி கிராமம் 32 வயதான ரமா என்ற பெண் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அந்த பெண்ணை அங்கிருந்த ஒரு பாம்பு கடித்துள்ளது.
இதனால், அப்பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், அப்பெண்ணின் மகன் நிகில் என்பவர், கடித்த அந்தப் பாம்பை பிடித்து பாலிதீனில் போட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்.
இந்த பாம்பைப் பார்த்த மருத்துவமனையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியமடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.