மாப்பிள்ளை உடையால் அடிதடியில் முடிந்த திருமணம் - இறுதியில் நடந்தது என்ன?
பாரம்பரிய உடை அணியாததால் மணமகன் மற்றும் மணப்பெண்ணின் குடும்பத்தினர் இடையே வெடித்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் தஹர் மாவட்டத்தை சேர்ந்த சுந்தர்லால் என்பவருக்கும், அதேமாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த நாட்களுக்கு முன் திருமண நடைபெறுவதாக இருந்தது.
திருமண நேரம் நெருங்கிய நிலையில் மணமேடைக்கு மணமகனும், மணமகளும் வந்துள்ளனர்.
திருமண உடையால் ஏற்பட்ட சண்டை
அப்போது பெண் வீட்டாரின் பாரம்பரிய முறைப்படி மணமகனை டொடி குர்தா உடையை அணிந்து தான் மணமேடையில், அமர்ந்து திருமண சடங்கு மற்றும் தாலிக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என கூறியுள்ளனர்.
ஆனால், மாப்பிள்ளை மறுக்க பெண் வீட்டாருக்கும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் இடையே மணமேடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய பின்னர், இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட இரு வீட்டார்களும் கற்கலை வீசி தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இறுதியில் திருமணம் தடைப்பட, இரு வீட்டினரும் போலீசில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை நடத்தகையில், இரு வீட்டாரையும் சமாதானம் செய்து கோவிலில் திருமணம் நடைப்பெற்றுள்ளது.
மேலும் மனிதன் செய்திகளை தொடர்ந்து படிக்க....தங்கம் விலை அதிரடி மாற்றம் - இன்றைய விலை விபரம்