தங்கம் விலை அதிரடி மாற்றம் - இன்றைய விலை விபரம்
தங்கம் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கத்தை கண்டாலும், குறையும் நாட்களில் மட்டுமே தங்கத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
தொடர்ந்து, கேஸ் விலை பெட்ரோல் விலை ஒரு பக்கம் உயர்ந்து கொண்டிருந்தாலும் தங்கம் விலை ஏற்றத்தை விட, குறைவது ரொம்பவே குறைவு தான்.
இதனால், குறையும் போதே தங்கத்தை வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இன்றைய நாளின் தங்கம் விலையை பற்றி பார்ப்போம். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.32 குறைந்து, ரூ.38,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.4 குறைந்து, ரூ.4,873-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.66.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.66,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கூகுள் குரோம் பயனாளர்களுக்கு புதிய எச்சரிக்கை விடுத்த கூகுள்! என்ன செய்ய வேண்டும்?