டே கேரில் 15 மாத குழந்தைக்கு நேர்ந்த அவலம்! வைரலாகும் காட்சி
உத்தர பிரதேசத்தில் 15 மாத பெண் குழந்தையை, பெண்ணொருவர் கொடூரமாக தாக்கியதுடன், கை, கால்களை கடித்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஒரு குழந்தைகள் பராமரிப்பு மையம் அமைந்துள்ளது.
அந்த குடியிருப்பில், தங்கியுள்ள தம்பதிகள் பெரும்பாலும் இருவருமே வேலைக்கு செல்பவர்களாக என்பதால், வேலைக்கு செல்லும் போது அவர்களின் குழந்தைகளை குறித்த பராமரிப்பு நிலையத்தில் விட்டுசெல்வது வழக்கம்.
தனியார் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் குறித்த மையத்தில் 15 மாத பெண் குழந்தையை, பெற்றோர் விட்டுச் சென்றுள்ளனர். அண்மையில் அந்த குழந்தையின் உடலில் திடீரென தழும்புகள் தென்பட்டுள்ளன.
அதைக் கண்டு முதலில் அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஏதோ அலர்ஜி ஏற்பட்டதாக நினைத்து மருத்துவமனையில் சோதித்ததில், கிள்ளி வைத்து, கடித்ததால் ஏற்பட்ட காயம் எனக் கூறியுள்ளனர்.
சிசிடிவி கேமரா பதிவு
அதனையடுத்து குறித்த பராமரிப்பு நிலையத்தின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது,தொடர்ந்து குழந்தை அழுததால் ஆத்திரமடைந்த பாராமரிக்கும் பெண், பிளாஸ்டிக் பேட்டை எடுத்து தலையிலும், நெற்றியிலும் அடித்துள்ளார்.
வலி தாங்க முடியாமல் குழந்தை மேலும் கதறி அழுததால், குழந்தையை கிள்ளியும், கடித்தும் காயப்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், பெற்றோர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |