“உத்தம புத்திரன்” நடித்த இந்த குண்டு சிறுவனை நினைவிருக்கா? ஒல்லியா அடையாளமே தெரியல
உத்தம புத்திரன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மாஸ்டர் பரத்தின் தற்போதைய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
வைரல் புகைப்படம்
பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் மாஸ்டர் பரத். இவர் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர்.
அதிலும் மிகவும் பிரபலமான 'போக்கிரி', 'சிறுத்தை' போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்தாலும் தன் நடிப்பு திறமை மூலம் மக்கள் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டு வருகிறார்.
திரைப்படத்தில் இவரின் சேட்டை, டையலாக் போன்ற அம்சங்களை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். பருமனான உடலும், தனித்துவமான குரலும், டைமிங் டையலாக்கும் என ரசிகர்களை கவர்ந்தவர்.
பிரபல டிவி நிகழ்ச்சியில் 2007-ம் ஆண்டு வரை ஒளிபரப்பான தொடர் ‘மை டியர் பூதம்” மூலம் குழந்தைகளுக்கு விரும்பும் நடிகனாக மாறினார். 2002-ம் ஆண்டு ஜெயராம் நடிப்பில் தமிழில் வெளியான ‘நைனா’ படத்தில் நடித்திருந்தார்.
இ்ந்த நிலையில் இவர் முன்னர் இருந்த உடல் பாங்கை மாற்றி தற்போது ஒல்லியாகவும் அழகாகவும் மாறி உள்ளார். இவரை பார்ப்பதற்கு அடையாளமே தெரியவில்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணைவாசிகளால் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |