வேலைக்கு போகும் பெண்களை குறி வைத்து தாக்கும் கருப்பை கட்டி- இந்த அறிகுறி தெரிந்தால் உஷார்!
பெண்களின் வாழ்க்கை ஆண்களை போல் எளிதாக இருக்காது. ஏனெனின் ஆண்களை விட அதிகமான பொறுப்புகளை பெண்கள் தான் சுமக்கிறார்கள்.
ஒவ்வொரு பெண்களும் திருமணத்திற்கு முன்னர் பெற்றோர்களுக்காகவும் திருமணத்திற்கு பின்னர் கணவர், குழந்தைகளுக்காக வேலை செய்கிறார்கள்.
தன்னுடைய கஷ்டத்தை கூட பொருட்படுத்தாமல் நாள்தோறும் உழைக்கும் மனம் ஆண்களை விட பெண்களுக்கே உள்ளது. உழைப்பு என நாம் கூறும் போது வெளியில் சென்று செய்யும் வேலையையும் தாண்டி வீட்டில் நமக்காக செய்யும் வேலையும் அதில் அடங்கும்.
முந்தைய காலத்தில் பெண்கள் குடும்பத்தை பார்த்து கொண்டு வீட்டில் இருந்தார்கள். ஆனால் தற்போது இருக்கும் பெண்கள் வெளியில் வேலைக்கு சென்றுக் கொண்டு குடும்பத்தையும் கவனித்து வருகிறார்கள்.
இப்படி ஓய்வின்றி பல பெண்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சில சமயங்களில் அவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி, எண்ணற்ற ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்தித்து வருகின்றனர்.
இருந்தபோதும் அவர்கள் தங்களின் ஆரோக்கிய பிரச்சனைகளைப் பொருட்படுத்தாமல், அயராது தினமும் உழைக்கிறார்கள். அத்தகைய பெண்கள் சந்திக்கும் உடல் கோளாறுகளில் ஒன்று தான் “கருப்பை கட்டி” (uterine fibroid).
அந்த வகையில் கருப்பை கட்டி (uterine fibroid) ஏன் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிகமாக வருகின்றது என்பதனை தொடர்ந்து நாம் பதிவில் பார்க்கலாம்.
கருப்பை கட்டி (uterine fibroid)
இன்றைய காலத்தில் நிறைய பெண்கள் கருப்பை நார்த்திசுக்கட்டி பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். இந்த நோய் தீவிரமாகும் பட்சத்தில் புற்றுநோயாக மாற வாய்ப்பு உள்ளது.
நார்த்திசுக்கட்டிகள் பெண்களின் தினசரி வாழ்க்கையை சீர்குலைக்கிறது. அத்துடன் அவர்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இதனால் அவர்களுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் உருவாகிறது.
அநேகமான பெண்களுக்கு தங்களுக்கு கருப்பை நார்த்திசுக்கட்டி இருக்கிறது என்பதனை அறியாமல் இருப்பார்கள். இது நாளடைவில் மோசமான விளைவை ஏற்படுத்திவிடும். கருப்பை நார்த்திசு கட்டிகளின் அறிகுறிகளை அறிந்து கொள்வதால் பாதிப்பை ஏற்படுத்தும் முன்னர் தடுக்கலாம்.
கருப்பை நார்த்திசு கட்டிகளின் அறிகுறிகள்
- வழக்கத்திற்கு மாறாக அதிகமான இரத்தப்போக்கு இருக்கும்.
- அடிவயிற்றுப் பகுதி வீங்கி இருக்கும்.
- சிறிது உண்டாலே வயிறு நிரம்பியது போன்ற உணர்வு இருக்கும். அடிக்கடி இப்படி இருந்தால் மருத்துவரை பார்க்கலாம்.
- வேலையில் இருக்கும் போது அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்று உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.
- உடலுறவின் போது வலி இருக்கும்.
- அளவிற்கு அதிகமாக முதுகு வலி இருக்கும்.
- பிரசவத்தின் போது சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- கருத்தரிப்பதில் சிக்கல்கள் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |