இந்த இரண்டு எண்ணையை பயன்படுத்தினால் முடி அசுர வேகத்தில் வளருமா? தெரிஞ்சுக்கோங்க
சாதாரணமாக முடி உதிர்தல் என்பது பொதுவான ஒரு பிரச்சனையாகும். ஆனால் ஒரு நாளைக்கு கணக்கிட முடியாத அனவில் முடி கொட்டினால் அது ஆபத்தானது.
வேலைகளில் பிஸியாக இருக்கும் பெண்களுக்கு முடியை கவனிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை, இதனால் தான் முடி பல மாசுக்களுக்கு உள்ளாகி வளர்ச்சியில் குள்றி வருகின்றது.
அந்த பிரச்சனைக்காக எல்லோரும் பல வைத்தியங்களை செய்தாலும் அவர்களுக்கு சரியான பலன்கள் கிடைப்பதில்லை .
அந்த வகையில் முடியின் வேர் வரை சென்று ஊட்டமளித்து முடி வளரக்கூடிய செயற்பாட்டை இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டு வைத்தியம்
முடிக்கு ஆமணக்கு எண்ணை பயன்படுத்துவதால் முடி ஈரப்பதத்துடன் இருக்கும். அதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது.
மற்றும் மற்றய விஷக்கிருமிகளின் தொற்றுக்களில் இருந்து எம்மை பாதுகாக்கிறது.
தலையில் ஒவ்வொரு நாளும் தேங்காய் எண்ணை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
தேங்காய் எண்ணெய் முடி தண்டுக்கு மேல் ஒரு பூச்சு உருவாக்குகி முடிக்கு ஊட்டத்தை அளிக்கிறது.
இந்த இரண்டு எண்ணையையும் சேர்த்து நீங்கள் தலையில் தடவி வந்தால் முடி பக்டீரியா தொற்றில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வளரும்.