உங்களது போனுக்கு நண்பரின் சார்ஜரை பயன்படுத்துறீங்களா? இனி அந்த தவறை செய்யாதீங்க
உங்களது மொபைலுக்கு மற்றவர்களின் சார்ஜரை பயன்படுத்தும் பழக்கம் உங்களிடம் இருந்தால் இந்த பதிவை தவறாமல் பார்க்க வேண்டுமாம்.
மொபைல்
இன்றைய காலத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் உள்ளது.
உறவுகளிடம் பேசுவதற்கு மற்றும் தகவல் தொடர்புக்காக என்று இருந்த போன்கள் தற்போது ஒரு நபரின் முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது.
ஆம் பணப்பரிமாற்றம் தொடங்கி சாப்பாடு ஆர்டர் கொடுக்கும் நிலை என்று வளர்ந்து கொண்டே செல்கின்றது. இவ்வாறு நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களுக்கு மற்றவர்களின் சார்ஜரைப் பயன்படுத்தி சார்ஜ் செய்தால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மற்றவர்களின் சார்ஜரை ஏன் பயன்படுத்தக்கூடாது?
பொதுவாக ஸ்மார்ட்போன்கள் மற்ற சார்ஜர்களை ஏற்காதாம். காரணம் உங்களது மொபைல் 18 வாட் சார்ஜிங்கை ஆதரிக்கின்றது என்றால், வேறொரு நிறுவனத்தில் 80 வாட் சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்கிறீர்கள் என்றால், அடாப்டர் வாட்ஸ், ஃபோனின் ஆதரிக்கப்படும் வாட்களை விட அதிகமாக இருந்தால், உங்கள் ஃபோனை சேதப்படுத்தும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.
ஒரிஜினல் சார்ஜரைத் தவிர வேறு நிறுவனத்தின் சார்ஜரைக் கொண்டு போனை சார்ஜ் செய்யும் போது போனின் பேட்டரி பழுதாகிவிடும்.
மற்றவர்களின் சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்யும் போது, போன் அதிக வெப்பமடையச் செய்வதுடன் இதனை அடிக்கடி நீங்கள் செய்தீர்கள் என்றால் பேட்டரி பழுதுடைந்து தீப்பிடிக்கும் நிலை ஏற்பட்டுவிடும்.
சார்ஜர் போனுடன் பொருந்தவில்லை என்றால், உங்கள் போனின் பேட்டரி திறன் குறைவாக இருக்கலாம். இது பேட்டரியை விரைவில் சேதப்படுத்தும். வேறு நிறுவனத்தின் சார்ஜர் மூலம் போனை சார்ஜ் செய்தால் போனின் திரை, ஹார்டுவேர் சேதமடையலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |