போலியான ஐபோனை கண்டறிவது எப்படி? சுலபமான வழிமுறை இதோ
சந்தைகளில் போலி ஐபோன்களின் வரவு அதிகமாகியுள்ளதால், உண்மையான ஐபோனை எவ்வாறு கண்டறியலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஐபோன்
இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் சிறந்த தேர்வாக இருப்பது ஐபோன் தான். ஆப்பிளின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அதன் திறன் மற்றும் அம்சங்களால் தனித்து நிற்கின்றன.
ஐபோன்களின் தேவைகள் அதிகரித்து வருவதால் ஐபோன் மாதிரியான போலி மாடல்களும் அதிகரித்துள்ளது. ஆப்பிள் ஸ்டோர் போன்ற நம்பகமான இடங்களில் இருந்து ஐபோன் வாங்கினால், கவலைப்படத் தேவையில்லை.
ஆனால் நீங்கள் அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடமிருந்து ஐபோனை வாங்கும் பட்சத்தில் சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம்.
மேலும் பழுதுபார்க்க கொடுக்கும் இடத்திலும் நீங்கள் நிச்சயம் கவனம் எடுக்க வேண்டும். ஏனெனில் பழுதுபார்க்கும் போது அவர்களின் உண்மையான ஐபோனை போலியானவைகளுடன் மாற்றியமைப்பதாக புகார் அளிக்கும் நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன.
ஆதலால் ஐபோன்களை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
போலியானதை எவ்வாறு கண்டறியலாம்?
உங்கள் ஐபோனின் நம்பகத்தன்மையை சரிபார்க்க முதல் படிகளில் ஒன்று பேக்கேஜிங் மற்றும் பாகங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்க்கவும். இதில் உயர்தர படங்கள் மற்றும் துல்லியமான எழுத்துக்களுடன் காணப்பட்டால் ஐபோன் பாக்ஸ்கள் உறுதியானதாகும். அதுவே தரமில்லாத பிரிண்டிங், நம்பகமில்லா பேக்கேஜிங் அல்லது பொருந்தாத பாகங்கள் ஆகியவற்றை நீங்கள் கவனித்தால், அது போலி ஐபோனாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.
ஒவ்வொரு ஸ்மார்ட்போனைப் போலவே, ஐபோனிலும் தனித்துவமான சீரியல் எண் மற்றும் சர்வதேச மொபைல் சாதன அடையாள எண் (IMEI) உள்ளது. சீரியல் எண்ணைக் கண்டறிய, Settings > General > About என்பதற்குச் செல்லவும்.
பின்பு, ஆப்பிளின் கவரேஜ் இணைய பக்கத்திற்குச் சென்று சீரியல் எண்ணை உள்ளிட்டால் ஐபோன் மாடல், வாரண்டி மற்றும் பிற தொடர்புடைய தகவல்களை பார்க்க முடியும். IMEI எண்ணை சரிபார்க்க, உங்கள் ஐபோனில் *#06# ஐ டயல் செய்யவும். காட்டப்படும் எண்ணை பாக்ஸில் பட்டியலிடப்பட்டுள்ள IMEI மற்றும் சிம் ட்ரேயுடன் ஒப்பிட்டடு பாருங்கள். அதில் எல்லா எண்களும் கண்டிப்பாக பொருந்த வேண்டும்.
ஆப்பிள் ஐபோன்கள் பிரீமியம் மற்றும் உறுதித்தன்மை கொண்டுள்ளது. தளர்வான பாகங்கள், உறுதியற்ற பட்டன்கள் இருந்தால் அது ஆப்பிள் தயாரிப்பாக இருக்காது.
மேலும் பின்புறத்தில் உள்ள ஆப்பிள் லோகோ சரியாகவும், சீராகவும் அமைக்கப்பட்டிருக்கும் மற்றும் தொடுவதற்கு மென்மையாக இருப்பதை நம்மால் உணர முடியும். ஸ்கிரீன் அளவு, டிஸ்ப்ளே தரம், எடை மற்றும் தடிமன் இவற்றினை கவனிக்கவும்.
சிம் ட்ரேயை அகற்றி ஸ்லாட்டை ஆய்வு செய்யவும். கள்ள ஐபோன்கள் பெரும்பாலும் அவற்றின் கட்டமைப்பில் தோராயமில்லாத விளிம்புகள், தவறான லோகோக்கள் வைத்து கண்டுபிடிக்கலாம்.
போலி ஐபோனைக் கண்டறிவதற்கான மிக முக்கியமான வழிகளில் ஒன்று அதனை மென்பொருள் மூலம் கண்டறிவது. உண்மையான ஐபோன்கள் ஆப்பிளின் தனியுரிம iOS இல் இயங்குகின்றன.
உங்கள் ஐபோன் iOS இன் சமீபத்திய பதிப்பில் இயங்குகிறதா என்பதைப் பார்க்க, Settings > General > Software Update என்பதற்குச் சென்று இதைச் சரிபார்க்கலாம். உண்மையான ஐபோன் எப்போதும் iOS இல் மட்டுமே இயங்கும்.
மேலே கூறப்பட்ட பிரச்சனைகளை நீங்கள் கவனத்தாலோ அல்லது ஐபோனின் நம்பகத்தன்மை உறுதிபடுத்த நினைத்தாலோ ஆப்பிள் சேவை மையத்திற்கு உங்களது சந்தேகத்தை தெளிவு படுத்திக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |