Archive செய்யாமல் WhatsApp Chat-ஐ மறைப்பது எப்படி? இத தெரிஞ்சிக்கோங்க
தற்போது உலகளவில் WhatsApp என்பது பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் பிரபலமான செயலியாக மாறி விட்டது.
சில சமயங்களில் பயனர்களின் இக்கட்டான சூழ்நிலையால் குறிப்பிட்ட சில நபர்களுடன் நீங்கள் பேசிய உரையாடல்களை டெலிட் செய்யாமல் இருப்பதால் பல பிரச்சினைகள் ஏற்படலாம்.
அதே சமயம் உரையாடல் பின்னர் உதவலாம் என நினைத்து மறைத்து வைக்கவும் தேவை ஏற்படலாம். இப்படியான நேரங்களில் WhatsApp-ல் Archive என்ற அம்சம் உள்ளது. இதனால் உரையாடல்களை மறைத்து வைக்கலாம்.
இந்த அம்சம் தற்போது பிரபலமாக இருப்பதால் சீக்கிரம் நீங்கள் மாட்டிக் கொள்ளலாம். இப்படியானவர்கள் தங்களின் சாட்களை பிரைவேட்டாக மறைத்து வைப்பது எப்படி என சிந்தித்து கொண்டிருப்பார்கள்.
அந்த வகையில், WhatsApp-ல் Chat-ஐ எப்படி மறைத்து வைப்பது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
WhatsApp-ல் Chat-ஐ மறைத்து வைப்பது எப்படி?
- நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் Android என்றால் நீங்கள் உங்கள் WhatsApp செயலியை திறந்து கொள்ளவும்.
- பின்னர் நீங்கள் மறைத்து வைக்கும் சாட்டுகளை திறக்கவும்.
- Chat-ன் மேல் வலது மூலையில் மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை இருக்கும். அதனை தட்டுங்கள்
- அங்கிருக்கும் Option-களில் லாக் சாட் (Lock Chat) என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை Click செய்யவும்.
- அப்போது (Keep this chat locked and hidden) என்ற வாக்கியம் உங்களுடைய ஸ்கிரீனில் தெரிவதை பாரக்க முடியும்.
- நீங்கள் தேர்ந்தெடுத்த சாட்டுகளை லாக் செய்வதற்கு கண்டின்யூ (Continue) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பின்னர் உங்களுடைய முகம் அல்லது கைரேகை பயன்படுத்தி மட்டுமே திறக்கக்கூடிய வகையில் ஒரு சில சாட்டுகளை உங்களால் பிளாக் செய்ய முடியும்.
- அதே நேரத்தில் சாட்டுகள் லாக் செய்த பின்னர் சாட்டின் நோட்டிஃபிகேஷன் மற்றும் கான்டாக்டும் மறைக்கப்பட்டிருக்கும். இதற்கான நோட்டிஃபிகேஷன்கள் வாட்ஸ் அப்பில் 1 நியூ மெசேஜ் (1 New message) என்று காட்டப்படும்.
- சிலருக்கு அந்த சாட்டுகளை பிரைவேட்டாக வைக்க வேண்டாம் என தோன்றும். அந்த சமயத்தில் லாக்டு சாட்ஸ் (Locked Chats) ஃபோல்டருக்கு செல்லவும்.
- அங்கு Unblock செய்து சாட்டை தேர்வு செய்து மூன்று புள்ளி கொண்ட ஐகானை கிளிக் செய்து அதில் அன்பிளாக் (unblock) சாட் என்பதை கிளிக் செய்யவும்.
- இந்த முறையை பின்பற்றுவதன் மூலமாக உங்களுடைய தனிப்பட்ட உரையாடல்களை ரகசியமாக வைத்து கொள்ளலாம். இதனால் வரும் பிரச்சினைகளும் குறைவாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |