முகத்துக்கு சோப்பு போட்டு கழுவினால் என்ன நடக்கும் தெரியுமா? பெண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க
முகத்தை சோப் பயன்படுத்தி கழுவுவதால் சருமத்தில் பக்க விளைவுகள் அதிகமாக ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சோப்பு ஆபத்து
முகத்திலிருக்கும் சருமத்தின் pH ஐ பெறுமானத்தை மாற்றக் கூடிய ஆற்றல் சோப்களுக்கு இருக்கின்றன.
அந்த வகையில் சருமத்தின் சிறந்த உடலியல் pH 5.5 ஆக இருக்கும்.
இந்த பெறுமானம் சரியாக இருக்கும் பொழுது முகத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது. மாறாக சோப்புகளில் அல்கலைன் pH உள்ளது, இது 9 வரை இருக்கலாம்.
இந்த உயர் pH பெறுமானம் தோலில் உள்ள அடுக்கு போன்ற அமைப்பை சீர்குலைத்து அதிலுள்ள நொதிய செயல்பாட்டையும் மாற்றியமைக்கிறது.
அத்துடன் சருமத்தையும் கடினமாக்குகின்றது. மேலும், சோப்புகள் தோலின் மேல் இருக்கும் அடுக்கை ஹைப்பர்-ஹைட்ரேட் செய்கிறது. இதனால் தோலின் கீழ் இருக்கும் கட்டுமானத் தொகுதியை சேதப்படுத்துகிறது.
ஃபேஸ் வாஷ் சிறந்த தீர்வு
சருமத்தின் பாதுகாப்பினை உறுதி செய்ய pH- 5.5 க்கு பொருத்தமானது.
இதனை சரியாக பரிசோதித்த பின்னர் முகம் கழுவுவதற்கான திரவத்தை பயன்படுத்தலாம்.
சோப்கள் முகத்திலுள்ள அழுக்குக்களை மட்டுமல்ல தோலில் இருக்கும் அத்தியாவசிய கொழுப்புகளையும் தடைச் செய்கிறது. இப்படியான நேரங்களில் ஃபேஸ் வாஷ் கொண்டு முகம் கழுவலாம். இதனால் முகத்திலுள்ள இயற்கையான எண்ணெய்த்தன்மை இருந்து கொண்டே இருக்கும்.
pH பெறுமானமும் மாறாமல் இருக்கும். தினமும் இரண்டு முறை ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவலாம். எனவே இனி ஆபத்தை ஏற்படுத்தும் சோப்பை முகத்திற்கு பயன்படுத்த வேண்டாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |