ஆண்களே உஷார்..! Stress அதிகமானால் என்ன நடக்கும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக தற்போது இருக்கும் பிஸியான காலக்கட்டத்தில் பலருக்கும் மன அழுத்தம் பிரச்சினை இருக்கும்.
மன அழுத்தம் என்பது உணர்ச்சி அல்லது உடல் பதற்றத்தின் உணர்வாக பார்க்கப்படுகின்றது.
இந்த பிரச்சினையால் விரக்தி, கோபம் அல்லது பதட்டம் உள்ளிட்ட உணர்வுகள் தோன்றும்.
மேற்குறிப்பிட்ட உணர்வுகளை அடிக்கடி உணர்பவர்கள் உரிய சிகிச்சை எடுத்து கொண்டால் மன அழுத்தத்திலிருந்து வெளியில் வரலாம்.
இதனை தவறும் பட்சத்தில் மன அழுத்தம் உடல் ரீதியாக பல வகையான ஆபத்துக்களை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக ஒருவர் மன அழுத்தம் பிரச்சினையால் அவஸ்தைப்படும் போது உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புக்களும் ஒவ்வொரு விதத்தில் பாதிக்கப்படுகின்றன.
அந்த வகையில், மன அழுத்தம் அடையும் போது உடலுறுப்புக்கள் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
மன அழுத்தத்தினால் ஏற்படும் விளைவுகள்
1. மன அழுத்தம் பிரச்சினையுள்ளவர்களுக்கு முதலில் உடலில் உள்ள தசைகளில் வலிகள் எற்படும். அத்துடன் தசை பிடிப்பு உருவாகும். கீல்வாதம், ஃபைப்ரோமியால்ஜியா மற்றும் பிற நிலைமைகளின் அறிகுறிகள் தீவிரமாக வாய்ப்பு இருக்கிறது.
2. நாளடைவில் கடுமையான வயிற்றுவலிக்கு ஆளாகுவீர்கள். மன அழுத்தம் செரிமான பிரச்சினையை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வலி, வாயு தொல்லை, மலச்சிக்கல் போன்ற எளிய செரிமான பிரச்சனைகள் முதல், எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி மற்றும் நெஞ்செரிச்சல் வரை பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவரின் ஆரோக்கியம் அவர்களின் செரிமான பகுதியில் தான் இருக்கிறது. இது பாதிக்கப்படும் போது ஏகப்பட்ட பின்விளைவுகள் ஏற்படும். இது தீவிரமாகும் சற்று ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்.
3. உடலில் மன அழுத்தம் அதிகரிக்கும் போது தோள்பட்டை, தலை மற்றும் தாடை பகுதிகளில் மோசமான விளைவுகளை பார்க்கலாம். மன அழுத்தம் இருப்பவர்கள் அதிகமாக பதற்றமாவார்கள் இவர்களுக்கு தலைவலி, கழுத்து மற்றும் தாடையில் இறுக்கம் மற்றும் கழுத்து, தோள்பகுதிகளில் பிடிப்புக்கள் போன்ற பிரச்சினைகள் இருக்கும். அதற்காக மருந்துவில்லைகள் வாங்கி குடிப்பதால் எந்தவிதமான பயனும் இல்லை.
4. நோயெர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும். ஏனென்றால் மன அழுத்தம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக்கும். இதனால் தினமும் உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கையாள வேண்டும்.
5. மன அழுத்தமானது பிரச்சினை வந்தால் அதனை உங்கள் சருமம் மற்றும் தலைமுடியில் அவதானிக்கலாம். அதிலும் குறிப்பாக அதிக மன அழுத்தமானது சருமத்தில் அரிப்புமிக்க அழற்சி, தடிப்பு தோல் அழற்சி போன்ற சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதே சமயம் தலைமுடி கொத்து கொத்தாக முடியை உதிரத் தூண்டும்.
6. அதிக மன அழுத்தம் பிரச்சினை ஏற்படும் போது கார்டிசோல் மற்றும் அட்ரீனலின் அதிகரித்து, இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகமாகும். இதனால் கூடுதலாக இரத்த நாளங்களில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். அத்துடன் சுவாசிப்பதில் மாற்றத்தை சந்திக்க நேரிட்டு, சுவாச பிரச்சனைகளும் ஏற்படலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |