Tamizha Tamizha: மாடர்னாக மாறச்சொல்லும் கணவர்... பெண் கொடுத்த பதிலால் சிரிப்பில் அரங்கம்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் வாழ்க்கைத் துணையை கிராமத்தில் தேர்வு செய்த நகரத்துவாசிகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் வாழ்க்கைத் துணையை கிராமத்தில் தேர்வு செய்த நகரத்துவாசிகள் என்ற தலைப்பில் பல உண்மையை அரங்கத்தில் கூறியுள்ளனர்.
இதில் புடவை கட்டி, நகை அணிந்து, பூ வைத்து வெளியே செல்ல ஆசைப்படும் மனைவியை கவுன் போட சொல்லி கணவர் வற்புறுத்துவதாக கூறுகின்றார்.
மற்றொரு பெண் ரயிலில் பயணம் செய்வதற்கு மறுக்கின்றனர். இதற்கு காரணமாக ரிதம் படத்தில் நடந்த விபத்தினைக் கூறி அரங்கத்தை சிரிக்க வைத்துள்ளனர்.
வேறொரு பெண் கணவர் கூறும் மாற்றத்திற்கு நான் மாறவே மாட்டேன்... அதை இந்த தமிழா தமிழா நிகழ்ச்சியிலேயே கூறுகின்றேன் என்று சிரிப்பில் ஆழ்த்தியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |