இதய நோயாளிகளுக்கு பயனுள்ள ஸ்மார்ட் வாட்ச்... டாப் 5 பட்டியல் இதோ
இதய நோய் பிரச்சனை இருப்பவர்களுக்கு பயனுள்ள ஸ்மார்ட் வாட்ச் பட்டியலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தற்போது சந்தையில் பல ஸ்மார்ட் வாட்ச்கள் வெளியாகி வருகின்றது. அதில் நவீன சுகாதார அம்சத்துடன் வாட்ச்கள் இதய நோயாளிகளுக்கு பெரும் உதவியாக இருக்கின்றது.
இந்த வாட்ச்கள் ஹார்ட் ரேட், பிளட் ஆக்ஸிஜன் லெவல்ஸ் மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற முக்கியமான சுகாதாரத் தகவலை கண்காணிக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளன.
இதயம் தொடர்பான பிரச்சனையை முன்கூட்டியே கண்டறிவதற்கு இந்த ஸ்மார்ட் வாட்ச் உதவியாக இருக்கும்.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 (GPS 45mm)
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8-ஆனது உடல் வெப்பநிலை, இதய துடிப்பு, ரத்த அழுத்தம், ஸலீப் ட்ராகிங் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளதுடன், நேர்த்தியான வடிவமைப்பையும் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் LTEs:
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார் வாட்ச் ஆனது Galaxy Watch4 Classic LTE, எளிய முறையில் கையாள முடிவதுடன், தொலைபேசி இல்லாமலும் இதனை கையாள முடியும். இதிலும் ஹார்ட் ரேட் மானிட்டரிங் , ஸ்லீப் மானிட்டரிங், பாடி காம்போசிஷன் அனாலிசிஸ் மற்றும் 90க்கும் மேற்பட்ட ஒர்க்கவுட் ட்ராக்கிங் மோட்ஸ் இதில் அடங்கும்.
ஃபிட்பிட் சென்ஸ் அட்வான்ஸ்ட் ஸ்மார்ட் வாட்ச்:
ஃபிட்பிட் சென்ஸ் அட்வான்ஸ்ட் ஸ்மார்ட் வாட்ச்சானது, ECG ரீடிங்ஸ் மற்றும் ஸ்ட்ர்ஸ் மெஷர்மென்ட் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கியது. மேலும் இந்த ஸ்மார்ட் வாட்ச் நோட்டிஃபிகேஷன்ஸ், அசாதாரண மற்றும் குறைவாக இருக்கும் இதய துடிப்பை கண்டறிவதற்கான மானிட்டர்களை வழங்குகிறது.
அமேஸ்ஃபிட் ஜிடிஆர் மினி ஸ்மார்ட் வாட்ச்:
அமோஸ்ஃபிட் ஜிடிஆர் மனி ஸ்மார்ட் வாட்சானது, ஹார்ட் ரேட் மானிட்டரிங், பிளட் ஆக்ஸிஜன் சேச்சுரேஷன் மானிட்டரிங் மற்றும் ஸ்ட்ரஸ் லெவல் ட்ராக்கிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ஃபயர்-போல்ட் இன்வின்சிபிள் பிளஸ் AMOLED டிஸ்ப்ளே ஸ்மார்ட்வாட்ச்:
இந்த ஸ்மார்ட் வாட்ச்சிலும், இதயம் துடிப்பு, ரத்த அழுத்தத்தினை கண்காணிக்கும் வசதி இருப்பதுடன், இதன் பேட்டரியானது 5 நாட்கள் வரை சார்ஜ் தக்கவைக்கின்றது. அதே நேரம் ப்ளூடூத் காலிங் உடன் 2 நாட்கள் பேட்டரி லைஃபை வழக்குகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |