உணவில் தக்காளியை ஒதுக்கி வைக்கிறீங்களா? தெரியாத பல தகவல்கள் இதோ
உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் தக்காளியில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்வோம்.
தக்காளி
வைட்டமின் சி சத்துக்களை அதிகமாக கொண்டுள்ள தக்காளி சமையலுக்கு முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
சுவைக்காக சேர்க்கப்படும் தக்காளி பல உடல்நல பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகின்றது.
இதில் 40 சதவீதம் வைட்டமின் சி இருக்கின்றது என்று கூறப்படுகின்றது. இவை நோய் எதிர்ப்பு சக்தி, பார்வை மற்றும் தோல் பிரச்சனையினை நீக்க உதவுகின்றது.
எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் கே சத்தும், இதய செயல்பாட்டிற்கு தேவையான பொட்டாசியம் சத்தும் காணப்படுகின்றதும் காணப்படுகின்றது.
நன்மைகள் என்ன?
தக்காளியில் உள்ள லைகோபீன் இதய ஆரோக்கியத்திற்கு நன்மையை கொடுக்கும் ஆக்ஸிஜனேற்றியாக இருக்கின்றது. இவை நீரிழிவு மற்றும் பக்கவாதத்தினை வராமல் தடுக்கின்றது.
மேலும் இதிலுள்ள லைகோபீன் கண்களுக்கும் நன்மையை அளிக்கின்றது. தக்காளியில் லுடீன் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை பார்வை திறனை அதிகரிக்க உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
