இந்த pack மூன்று தடவை போடுங்க - முடி வேகமாக வளரும்
முடியை இருமடங்கு வேகமாக வளர வைக்க ஒரு ஹேர் பெக்கை எப்படி தயாரித்து போட வேண்டும் என்பதை இந்த பதிவில் நாங்கள் சொல்கிறோம்.
தலைமுடி வளர்ச்சி
பெண்களுக்கு அழகு என்றால் அது தலைமுடி தான் அந்த தலைமுடியை எவ்வளவு பராமரித்தாலும் கொட்டுகிறது என சிலருக்கு கவலை இருக்கும். ஆனால் இதற்கான சரியான காரணம் தெரிந்தால் தலைமுடி கொட்டுவதை தடுக்க முடியும்.
இவற்றைத் தடுக்க வீட்டிலேயே சில ஹேர் பேக்குகளைத் தயார் செய்து உபயோகிக்கலாம். முடி கொட்டுதல் பிரச்சனைக்கு மட்டுமின்றி தலைமுடி வேகமாக வளர்வதற்கும் இது ஒரு நல்ல பெக் ஆக இருக்கும்.
தலைமுடிக்கு ஹேர் பெக்
இதை எப்படி செய்லாம் என்பதை பார்க்கலாம். செம்பருத்தி பூ - 2 செம்பருத்தி இலை - 1 வெந்தயம் - 3 டீஸ்பூன் அரிசி - 2 டீஸ்பூன் பாசிப்பருப்பு - 4 டீஸ்பூன் முடி வளர்ச்சியை வேகமாக வளரச்செய்யும் இந்த ஹேர் பெக் செய்ய முதலில் மேலே கூறிய பொருட்கள் அனைத்தையும் தயாராக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
இவற்றையெல்லாம் ஒரு பாத்திரத்தில் எடுத்து, அனைத்துப் பொருட்களும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு வற்றியவுடன் இதை ஆற வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அவை அனைத்தையும் போட்டு ஒரு மிக்ஸியில் மைபோல அரைத்து உடுத்துக்கொள்ளவும்.
இந்த ஹேர் பேக்கை உச்சந்தலையிலிருந்து தலைமுடியின் நுனி வரை அப்ளை செய்து அரை மணி நேரத்திற்கு பின்னர் தலைமுடியை நாதாரண தண்ணீர் கொண்டு நன்றாக கழுவ வேண்டும்.
இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் தலைமுடியை வேகமாக வளரச்செய்யும். இதை எப்பவும் போடாமல் வாரத்திற்கு மூன்று முறை போட்டு வந்தால் உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |