கொரோனா நோயாளிக்கு தண்ணீரில் கலந்துகொடுக்கும் புதிய மருந்து! யாரெல்லாம் குடிக்கலாம்?
இந்தியாவில் புதிதாக 1,32,788 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,83,07,832 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகம் ஆகியவை இணைந்து 2 டிஜி என்ற மருந்தை உருவாக்கியுள்ளது.
இந்த மருந்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர் கடந்த மே 17-ம் தேதி வெளியிட்டனர்.
மேலும், இந்த 2 டிஜி மருந்தை தண்ணீரில் கலந்து குடிக்கும் லேசான அறிகுறி கொண்ட கொரோனா நோயாளிகள் 2 முதல் 3 நாட்களில் குணமடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தை உட்கொள்வதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவையை 40 சதவீதம் வரை குறைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
மற்ற தடுப்பு மருந்துகள் ஊசிகள் மூலமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த 2 டிஜி மருந்து பவுடர் வடிவில் சாச்செட் எனப்படும் சிறிய பாக்கெட்டில் கொடுக்கப்படுகிறது.
இம்மருந்தின் 10,000 பாக்கெட்டுகள் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. 2 டிஜி மருந்தின் ஒரு சாச்செட் ரூ.990-க்கு விற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
The 2DG medicine can be given to Covid-19 patients under the care and prescription of doctors. Directions for usage of this drug for Covid-19 patients as per DCGI approval are attached here for reference. For all queries regarding #2DG, please write to 2DG@drreddys.com pic.twitter.com/x19ayBoToG
— DRDO (@DRDO_India) June 1, 2021