திடீரென்று செத்து மடிந்த ஆயிரக்கணக்கான உயிர்கள்... எச்சரிக்கை மணியடித்த ஆராய்ச்சியாளர்கள்!
அமெரிக்க நாட்டில் நிலவிவரும் கடும் வெப்பத்தினால் ஆயிரக்கணக்கான கால்நடைகள் சுருண்டு விழுந்து செத்து மடியும் காட்சி வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பல மாகாணங்களில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.
பருவநிலை மாற்றமே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், மாட்டிறைச்சி வர்த்தகத்தில் சிறந்து விளங்கக்கூடிய கென்சாஸ் மாகாணத்தில், கடும் வெப்பம் காரணமாக, அங்கு உள்ள பண்ணை ஒன்றில் 2 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளது.
இது குறித்த காணொளி காட்சி தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புவி வெப்பமயமாதலால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை மணி அடித்து உள்ளனர்.
? #FoodShortage ? (10,000 cattle die in a Kansas ranch. They’re blaming a “Heat Wave” (Climate Change). They all die due to WATER POISING. They are creating a Food Crisis in #USA)#TheNewWorldOrder #Food #FoodShortagejoe #BidenDestroysAmerica #WEF #Illuminati #NWO #CCP #RU #UN pic.twitter.com/zmiPXQ1IiD
— LEGIØN X (@legionxgroup) June 15, 2022