அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல்! அவசர நிலை பிரகடனம் அறிவிப்பு
அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல் வீசிவருவதால் அந்நாட்டு அரசு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கிழக்கு கடற்கரை ஒட்டிய மாகாணங்களில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டு உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், நியூயார்க் நகரில் முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 5000-க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மின்சார விநியோகம் துண்டிக்கப்படலாம்.
கடற்கரை சாலைகளில் ஒரு அடி உயரத்திற்கும் அதிகமாக பனி மூடியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், லாங் ஐலேண்ட் பகுதியில் பெண் ஒருவர் காருக்குள் குளிரில் விறைத்து இறந்த நிலையில் கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பனிப்பொழிவு அதிகம் உள்ள மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.