உரிமையாளருடன் சேர்ந்து பட்டம் பெற்ற பூனை - பலரையும் ஆச்சரிப்பட வைத்த வைரல் புகைப்படம்!
உலகில் பலவிதமான விசித்திரமான சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அவை ஊடகம் வழியாகவும், அல்லது இணைய வழியாகவும் நமக்கு தெரிய வரும்.
அந்த வகையில், பூனை ஒன்று பட்டம் பெற்றுள்ளத தகவல் தான் பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியை சேர்ந்த Francesca Bourdier என்ற மாணவி ஒருவர் ஆன்லைன் மூலம் படிப்பை முடித்த நிலையில் அந்த பெண்ணுடன் அவரது பூனையுமான Suki-யும் சேர்த்து பட்டம் வென்றுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள், தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த புகைப்படங்களை பகிர்ந்த அவர், Francesca எனது பூனையும் என்னுடன் சேர்ந்து, ஒரு ஆன்லைன் வகுப்பினைக் கூட தவற விடாமல், அனைத்திலும் கலந்து கொண்டது.
இதனால், ஆஸ்டினிலுள்ள University of Texas-ல் இருந்து நாங்கள் இருவரும் பட்டம் பெற்றுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
எனவே பூனைக்கு பொருந்தும் வகையில், அது அணிந்துள்ள சிறிய மாடல் பட்டமளிப்பு ஆடைகளுடன், க்யூட்டாக பூனை இருப்பது குறித்துநெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.