வீட்டின் முன்பு நகர்ந்து செல்லும் மர்மமான உருவம் - சிசிடிவி காட்சியை கண்டு அலறிய குடும்பத்தினர்கள்;
வெள்ளை நிறத்தில் மர்மமான உருவம் இருப்பதை காட்டும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டின் அருகே வெள்ளை நிறத்தில் மர்மமான உருவம் ஒன்று தென்பட்டுள்ளது. இந்த காட்சியானது.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி-யில் பதிவாகி இருக்கிறது. இதனை Paranormality Magazine தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இதனிடையே அது என்ன என அமானுஷ்ய ஆர்வலர்களிடையே இந்த வீடியோ விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், 33 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவில் வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த மர்ம உருவம் மனிதனைப் போன்று இருக்கிறது.
அந்த உருவம் அந்த வீட்டின் தோட்டத்திற்குப் பின் குனிந்த நெளிந்தபடி செல்கிறது. வீட்டு உரிமையாளரின் காரை நெருங்கும்போது அது கவனமாக முன்னே நகர்ந்து சுற்றிப் பார்க்கிறது. இந்த வீடியோதான் தற்போது பேசும் பொருளாகவே மாறியிருக்கிறது.
Here's the video of the Pale creature caught on a security cam near Moorhead, KY. #cryptid pic.twitter.com/jCexxlQTA0
— Paranormality Magazine (@ParanormalityM) July 9, 2022