லொட்டரியில் 10,500 கோடி ரூபாய் பரிசு தொகை வென்ற நபர் - உலகின் மிகப்பெரிய ஜாக்பாட்
லொட்டரியின் மூலம் அமெரிக்க நபர் ஒருவர் இந்திய மதிப்பில் 10, 525 கோடி ரூபாய் பரிசுதொகை வென்று இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
லொட்டரி மூலம் பல ஏழை மக்களுக்கு அதிர்ஷ்டம் அடிப்பதை கேள்விப்பட்டிருப்பம், அதிலும் லட்சத்தில் ஆரம்பித்து கோடிகளில் வரை விழுந்த நம்மளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கும்.
அந்த வகையில், அமெரிக்காவில் நபர் ஒருவருக்கு விழுந்திருக்கும் பரிசு தொகை ஒட்டுமொத்த நாட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவில், லொட்டரி அதிகாரிகளால், கடந்த ஜுலை 3ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டப்படி 1.33 பில்லியன் மதிப்புள்ள மிகப்பெரிய ஜாக்பாட்டை அமெரிக்க நபர் ஒருவர் வென்றுள்ளார்.
இவை அதிகாரப்பூர்வமாக Mega Millions இணையதளத்தின்படி, அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான இல்லினாய்ஸில் பெயர் வெளியிடப்படாத நபர் ஆறு வெற்றி எண்களையும் கொண்ட ஒற்றை லொட்டரி சீட்டை வைத்திருந்தார்.
அதன் மூலம் அவருக்கு 1.337 பில்லியன் அதாவது, இந்திய மதிப்பில் 10, 525, 55 கோடி ரூபாய் வென்றுள்ளார். இலங்கை மதிப்பில், 48,000 கோடி அமெரிக்க டொலர் மதிப்பிலான ஜாக்பாட்டை வென்று உள்ளார். இதன் மூலம் உலகில் மிகப்பெரிய தொகை வென்றதில் மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறார்.
இதுகுறித்து, Mega Millions-ன் முன்னணி இயக்குநரான Pat McDonald என்பவர், மெகா மில்லியன்கள் வரலாற்றில் மிகப்பெரிய பரிசு வென்றவர்களில் ஒருவரைக் கண்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
வெற்றியாளர் விரைவில் வாழ்த்தப்படுவார் என தெரிவித்துள்ளார். இதற்கு முன் ஜனவரி 2016-ல் மற்ற அமெரிக்க தேசிய லாட்டரியான பவர் பாலில் 1.586 பில்லியன் அமெரிக்க டொலர் பரிசாய் ஒருவர் வென்றார்.
இது உலக சாதனையையாகும்.
அதன்பின், அக்டோபர் 2018 மெகா மில்லியன் டிராயிங்கில், ஒரு நபர் 1.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள இரண்டாவது மிக உயர்ந்த ஜாக்பாட்டை வென்றார். இதனால் வெற்றியாளர் இந்த தொகையை கண்டு ஆடிப்போயுள்ளார்.