சூப்பில் இறந்து கிடந்த எலி- ஷாக்கான வாடிக்கையாளர்கள்! வைரலாகும் வீடியோ
அமெரிக்காவில் உணவில் இறந்து போன எலி கிடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உணவில் இறந்து போன எலி
அமெரிக்கா, கொரியாடவின், கேமியோக் என்ற உணவகத்தில் கடந்த வாரம் பெண்ணும் அவரது கணவரும் வந்து சூப் ஆர்டர் செய்துள்ளனர்.
அப்போது, அவர்களுக்கு உணவகத்தில் சூப் கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட சூப்பை பார்த்தவுடன் அவர்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சூப்பில் எலி ஒன்று இறந்துக்கிடந்தது.
இதனால், அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் இருவரும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
புதன்கிழமையன்று ஒரு ஆய்வுக்குப் பிறகு, அந்த உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக TMZ தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உயர்ந்த ஓட்டல் தானே என்று நம்பி சாப்பிட சென்றால், நம் உயிருக்கே ஆபத்தாகிவிடும் போல இருக்கே என்றும், இப்படி கவனக்குறைவாக செயல்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Manhattan - Couple finds a dead rat (looks like a mouse) in the Korean takeout food they ordered #Korean #NYC #Rat #Mouse #crazyvideos pic.twitter.com/7XaJmuzxh7
— CrazyVideos (@CrazyVidKid) March 16, 2023