ஒரு சிலந்தியை கொல்ல வாலிபர் எடுத்த அதிர்ச்சி முடிவு... ஒட்டுமொத்த இடமும் பற்றி எரிந்த சம்பவம்;
சிலந்தியை வாலிபர் ஒருவர் கொல்ல நினைத்து அபாயகரமான செயலில் ஈடுபட்ட சம்பவம் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் திகைப்படய வைத்துள்ளது.
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில், உள்ள டிராப்பர் பகுதியை சேர்ந்தவர் கோரி மார்ட்டின் ஆலன்(26). இவர் சமீபத்தில் ஸ்ப்ரிங்க்வில்லி பகுதிக்கு சென்றிருக்கிறார்.
அப்போது சிலந்தி ஒன்றை கண்ட அவர், அதை கொல்ல நினைத்திருக்கிறார். சிலந்தி மீது லைட்டர் மூலம் தீ வைக்க அவர் முயற்சித்திருக்கிறார்.
ஆனால், துரதிருஷ்டவசமாக அருகில் உள்ள இடங்களுக்கு தீ பரவியிருக்கிறது. ஆனாலும், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர், அங்கிருந்து சென்றிருக்கிறார்.

mapletonserves
அவர் பற்ற வைத்த நெருப்பு அந்த பகுதி முழுவதும் பரவியிருக்கிறது. சுமார் 60 ஏக்கர் மலைப்பகுதி தீப்பிடித்து எரிந்து இருக்கிறது. இதனிடையே உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர் மூலமாக தீயிணை கட்டுப்படுத்த முயற்சித்து வந்துள்ளனர்.
இதன் பின் ஆலனின் விசாரணையில், பையில் போதை பொருட்கள் இருந்ததாக காவல் துறையினர் கூறியுள்ளனர். பின் கைது செய்யப்பட்டு உட்டா கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
மேலும், தீ விபத்து 90 சதவீதம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
8/1/22 @SpringvilleDPS fire and police asked @UCSO Deputies to respond to a fire north of their city. Cory Allan Martin, 26, Draper, said he tried to kill a spider with a lighter and started a fire. He was booked by for reckless burning, possession of marijuana/paraphernalia.
— Utah County Sheriff (@UCSO) August 3, 2022