ஊழியர்களுக்காக 50,000 லாட்டரி சீட்டுகளை வாங்கி குவித்த CEO - காரணம் என்ன? குவியும் வாழ்த்துக்கள்
பிரபல உணவகம் ஒன்று தனது ஊழியர்களுக்காக செய்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் இயங்கும் ரைசிங் கேம் சிக்கன் ஃபிங்கர்ஸ் (Raising Cane's Chicken Fingers) என்னும் உணவகம் ஒன்றில், சுமார் 50,000 ஊழியர்கள் வரை பணிபுரிந்து வருகின்றனர்.

இதனிடையே தனது ஊழியர்களுக்காக அந்த நிறுவனத்தின் ceo டோட் கிரேவ்ஸ் (Todd Graves) என்பவர், மெகா மில்லயின்ஸ் என்ற லாட்டரி நிறுவனத்தில், 830 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான பரிசு போட்டியில் இருந்து, சுமார் 50,000 டிக்கெட்டுகளை டோட் கிரேவ்ஸ் வாங்கி உள்ளார்.

ஒரு வேளை வாங்கிய டிக்கெட்டுகளில் பரிசு விழுந்தால், அதனை தங்களின் ஊழியர்களுக்கு பிரித்துக் கொடுக்க உள்ளதாகவும் டோட் கிரேவ்ஸ் தெரிவித்துள்ளார்.
இவர், 50,000 லாட்டரி டிக்கெட்களை வாங்குவதற்கு ஒரு டிக்கெட்டிற்கு தலா இரண்டு டாலர் வீதம், மொத்தம் ஒரு லட்சம் டாலர்களை லாட்டரி சீட்டுகளுக்காகவும் அவர்கள் செலவு செய்துள்ளார்.
இதற்காக அவர், 8 மணி நேரம் வரையும் அவர்கள் எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
Buying 50,000 lottery tickets is harder than you think! ? Hoping to share the winning jackpot with our 50,000 @RaisingCanes Crew. pic.twitter.com/hLlajBJwlH
— Todd Graves (@ToddGraves) July 25, 2022