முதல் கணவரால் அந்த பழக்கத்திற்கு ஆளான ஊர்வசி.. அப்படி அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது?
முதல் கணவரை மறப்பதற்காக நடிகை ஊர்வசி குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.
நடிகை ஊர்வசி
தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகையாக அறிமுகமாகி காலப்போக்கில் கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை ஊர்வசி.
இவர் இயக்குநர் பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான “முந்தானை முடிச்சி” படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அப்போது ஊர்வசிக்கு 13 வயது எனக் கூறப்படுகின்றது.
ஊர்வசியின் இயற்பெயர் கவிதா ரஞ்சனி என்பதாகும். சினிமாவிற்கு வந்த பின்னர் தன்பெயரையே மாற்றிக் கொண்டுள்ளார். இவருக்கு கலாரஞ்சனி, கல்பானா என இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். இவர்களும் நடிகைகள் தான்.
இப்படி குடும்பமாக சேர்ந்து சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்த வேளையில் ஊர்வசி மனோஜ் கே ஜெயன் என்பவரை திருமண செய்து கொண்டு திருமண வாழ்க்கைக்குள் சென்று விட்டார்.
நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த ஊர்வசி திடீரென குழப்பழக்கத்திற்கு ஆளாகி விட்டார் என்ற செய்தி பரவலானது. அப்படி அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது? எதனால் இப்படியான பழக்கம் வந்தது என யாருக்கும் புரியாத புதிராகவே இருந்தது.
திருமண வாழ்க்கை
இந்த நிலையில் நடிகை ஊர்வசியின் வாழ்க்கை வரலாறு தொடர்பில் செய்யாறு பாலு சில விடயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், “ஊர்வசி, மனோஜ் கே ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நட்சத்திர தம்பதிகளான இவர்களுக்கு பெண் குழந்தையொன்றும் இருந்தது. மகளுக்கு எட்டு வயது இருக்கும் பொழுது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
பின்னர் ஊர்வசி படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். கணவரை மறக்க தொடர்ந்து குடிக்க ஆரம்பித்தார். அவரின் வாழ்க்கையை அவரே முடித்து கொள்ள எடுத்த மோசமான முடிவாக இது பார்க்கப்பட்டது.
குடிப்பழக்கம்
இந்த விடயம் வெளியில் பரவ ஆரம்பித்த போது அனைவரும் கேட்க பேட்டியொன்றில் “கணவரை மறக்க தான் இப்படி செய்கிறேன்.” என ஒப்பு கொண்டார். அதிலிருந்து வெளியே வர போராடுவதாகவும் கூறினார்.
இந்த மோசமான பழக்கத்திலிருந்து வெளியே கொண்டு வர சினிமா அவருக்கு உதவியாக இருந்தது. குடிபழக்கத்திலிருந்து வெளியே வந்த ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகன் ஒருவரும் இருக்கிறார். தற்போது குடும்பமாக ஊர்வசி இருந்து வருகிறார்.” என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |