UPI பரிவர்த்தனை வேலை செய்யாதா? காரணம் இதுதானாம்
இன்று முதல் UPI பரிவர்த்தனை வேலை செய்யாது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நிறுத்தப்படும் UPI
பிப்ரவரி 1, 2025 முதல் UPI ஐடிகளில் சிறப்பு எழுத்துகள் அனுமதிக்கப்படாது என நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அறிவித்துள்ளது.
அனைத்து UPI பரிவர்த்தனைகளும் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளுக்கு இணங்குவதை உறுதிசெய்யும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பேமெண்ட் தளத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் இதன் மூலம் அதிகரிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
புதிய விதியின்படி அனைத்து UPI ஐடிகளும் கண்டிப்பாக எண் மற்றும் எழுத்துகளை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். அதாவது @, !, அல்லது # போன்ற சிறப்பு எழுத்துகளைக் கொண்ட எந்தவொரு UPI ஐடியும் தானாகவே நிராகரிக்கப்படும்.
தினசரி பரிவர்த்தனைகளுக்கு UPI ஐ நம்பியுள்ள கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு, இந்த மாற்றம் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம். சிறப்பு எழுத்துகளுடன் கூடிய UPI ஐடியை பயன்படுத்தி பணம் செலுத்த முயற்சித்தால், பரிவர்த்தனை தோல்வியடையும்.
எடுத்துக்காட்டாக, உங்கள் போன் எண் 1234567890 என வைத்துக்கொள்ளலாம். உங்களுக்கு ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்ட UPI ஐடி இருந்தால், உங்களது செல்லுபடியாகும் UPI ஐடி 1234567890oksbi என இருக்க வேண்டும்.
1234567890@ok-sbi என இருந்தால் அது செல்லுபடி ஆகாது. @ மற்றும் - என்ற இரண்டு சிறப்பு எழுத்துகள் அதில் இருப்பதால் அது ஏற்றுக்கொள்ளப்படாது.
UPI செயலி புதிய விதிகளுக்கு இணக்கமாக உள்ளதா என்று உறுதியாக தெரியவில்லை என்றால், அந்தச் செயலியின் வாடிக்கையாளர் சேவையை அணுகலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |