தேவையற்ற முடிகளை நிரந்தரமாக நீக்கும் Face pack- எத்தணை தடவை போடலாம்?
பொதுவாக ஒரு சில பெண்களுக்கு கை, கால்கள், உதட்டின் மேல் புறம் மற்றும் தாடைகளில் முடி வளர்ந்து இருக்கும்.
இந்த முடிகளை இலகுவாக நீக்குவதற்காக சிலர் அழகு நிலையங்களுக்கு செல்வார்கள். இன்னும் சில வீட்டு சமையலறையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு நீக்கலாம்.
அதிலும் குறிப்பாக அழகு நிலையங்களில் மெழுகு பயன்படுத்தி முடியை நீக்குவார்கள். இது அதிக அளவு வலியையும் வேதனையையும் தரும்.
இப்படி எதுவும் இல்லாமல் முடி தானாகவே உதிர்ந்து, திரும்பவும் வளராமல் இருக்க மஞ்சள் கிழங்கு பயன்படுத்தலாம்.
அந்த வகையில் மஞ்சள் கிழங்கை வைத்து எப்படி முடியை இல்லாமல் ஆக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
Face pack செய்வது எப்படி?
எமது முன்னோர்கள் முடியை அகற்றுவதற்காக மஞ்சள் கிழங்கு பயன்படுத்துவார்கள். இது முடியை இல்லாமல் செய்வதுடன், மீண்டும் வராமலும் பார்த்துக் கொள்கிறது.
மஞ்சள் கிழங்கு போன்று முடியை அகற்றும் வேலையை கோரை கிழங்கு செய்கிறது. இது அனைத்து விதமான நாட்டு மருந்து கடைகளிலும் வாங்கலாம்.
இதனை வாங்கி வெயிலில் நன்றாக காய வைத்து அதை இடித்து பொடியாக்கி சலித்து வைத்துக் கொள்ளவும். அதே போன்று கஸ்தூரி மஞ்சள் கிழங்கையும் காய வைத்து தனியாக அரைத்து வைக்கவும்.
கோரைக்கிழங்கு பொடி ஒரு ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் பொடி அரை ஸ்பூன் எடுத்து, ஒரு பவுலில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். குளித்து முடித்த பிறகு இந்த பொடியை எடுத்து எந்தெந்த இடத்தில் எல்லாம் முடி வளர்ச்சி இருக்கிறதோ? அந்த இடத்தில் தடவ வேண்டும்.
சுமாராக மூன்று நிமிடத்திற்கு பின்னர், மசாஜ் செய்து குளிக்க ணே்டும். இதனை தினம் செய்து வந்தால் முடிகள் வலுவிழந்து உதிர ஆரம்பிக்கும். புதிதாக எந்த முடியும் முளைக்காது. இளம் பருவத்தில் இருப்பவர்கள் செய்தால் அவர்களுக்கு நாளடைவில் நல்ல பலன் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |