உங்கள் முகத்தில் தேவையற்ற முடி இருக்கின்றதா? இதை தடவி பாருங்கள்!
பெண்கள் முகத்தில் முடிகள் வளரும் இதற்கு காரணம் நம் உடலில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையில் இல்லாமல் இருப்பது.
இதற்கு நாம் ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலமும் சரியான அளவிற்கு தூங்குவதன் மூலம் ஹார்மோன் மாற்றத்தை சரி செய்யலாம்.
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாத சில வீட்டு பொருட்களைக் கொண்டு முகத்தில் உள்ள முடிகளை நீக்கலாம்.
முடிகளை நீக்க சிறந்த டிப்ஸ்
பாலில் பாசிப்பருப்பை ஊறவைத்து நன்கு அரைத்து 20 நிமிடம் கழித்து முகத்தில் தடவி கொள்ளலாம்.
நம் முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்க 4 ஸ்பூன் அளவு பாசிப்பருப்பை ஊறவைத்து நன்கு அரைக்க வேண்டும். அதனுடன் ஆரஞ்சு பல தோளினை நன்கு பொடி செய்து சேர்க்க வேண்டும்.
பிறகு கால் டீஸ்பூன் பால் மற்றும் சந்தன பொடி சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பிறகு முகத்தில் தடவி கொள்ள வேண்டும். தடவிய பிறகு 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
இவ்வாறு ஒரு வாரம் செய்து வந்தால் உங்கள் முகத்தில் உள்ள முடிகள் மறைந்து விடும்.
முகத்திற்கு பொலிவு
முதலில் 2ஸ்பூன் பாசிப்பருப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை இரவு முழுவதும் நன்றாக தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
ஊற வைத்த பச்சைப்பயரை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள், அரைத்த பச்சைப்பயிரில் 2 ஸ்பூன் அளவு பாதாம் ஆயில்,1 ஸ்பூன் அளவிற்கு தேன் இந்த மூன்றையும் நன்றாக கலந்து உங்கள் முகத்தில் தடவி விட்டு 15 நிமிடங்கள் நன்றாக ஊற வைக்க வேண்டும்.
15 நிமிடம் கழித்து முகத்தை நன்கு கழுவுங்கள் உங்கள் முகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.
இது மட்டுமல்லாமல் உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால் 2 ஸ்பூன் அளவு பாசிப்பருப்பு மற்றும் 4 ஸ்பூன் அளவு பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.