பசி இல்லாமல் உணவு சாப்பிடுபவரா நீங்கள்? இந்த பிரச்சனை ஏற்படுமாம்
பசி இல்லாமல் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உணவு
இன்றைய காலத்தில் வாழ்க்கை முறை மாற்றம் உணவுப் பழக்கத்தையும் மாற்றியுள்ளது. ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது அல்லது பசிக்காமலே ஏதாவது சாப்பிட்டுக் கொண்டிருப்பது இவை உடலுக்கு தீங்காகும்.
நமது உடல் எப்பொழுது உணவு தேவைப்படுகின்றது என்பதை நமக்கு தெரியப்படுத்தும் நிலையில், இதனை கவனிக்காமல் ஆசைப்படும் உணவுகளை தெரிவு செய்து சாப்பிடுவதால் அதிக எடை, நீரிழிவு பிரச்சனைகள் உருவாகும்.
செய்யக்கூடாத தவறுகள்
அதிலும் இளைஞர்களிடையே உணவுப்பழக்கம் என்பது பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடுவது, மொபைல் பார்த்துக் கொண்டு சாப்பிடுவது வயிறு நிரம்பிய உணர்வை கொடுப்பதில்லை.
இதனால் உடலில் அதிக கலோரி சேர்ந்து செரிமான கோளாறுகளை ஏற்படுத்துகின்றது. ஒரே நேரத்தில் அதிகம் சாப்பிடுவது வயிற்றின் செயல்பாட்டையும் பாதிக்கின்றது.
உணவு சாப்பிட்ட பின்பு சோர்வாக இருந்தால் அது உங்களுக்கு எச்சரிக்கையாகும். அதாவது பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலில் ரத்த சர்க்கரை மாற்றங்களை ஏற்படுத்தி, சோர்வு, எரிச்சல் போன்ற விளைவுகளை ஏற்படுத்துகின்றது.
சரியாக சாப்பிடாமல் இருப்பதும், வேகமாக சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்தை குறைக்கின்றது. மேலும் வேகமாக சாப்பிடுபவர்களுக்கு கெட்ட கொழுப்பு அதிகரித்து இதய நோய்களுக்கும் வழிவகுக்கின்றது.
உணவை மெதுவாக ரசித்து சாப்பிடுவது நல்லது. அதிகமாக சாப்பிடுவதோ, மிக வேகமாக சாப்பிடுவதோ இரண்டுமே பாதிப்பே தரும். சில தருணங்களில் மன அழுத்தம் பதட்டம் இவற்றினையும் ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |