Skin care tips: சுருங்கிய முகத்தை புத்துணர்ச்சியாக்கும் காபி பொடி ஸ்க்ரப்
இளமையாக இருப்பதற்கு ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு சருமத்தை பராமரிப்பது முக்கியம்.
இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் சருமம் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்காக வெளியில் பொருட்களை தேடி அலையாமல் வீட்டிலுள்ள ஒரு சில பொருட்களை கொண்டு சரிச் செய்து கொள்ளலாம்.
அப்படியாயின், கடைகளில் பிரத்தியேகமாக கிடைக்கும் அழகு சாதன பொருட்களில் அதிகமான இரசாயனங்கள் கலந்திருக்கும். இதனால் சரும எரிச்சல், ஒவ்வாமை, சுருக்கம், கருப்பாக மாறுதல் உள்ளிட்ட பிரச்சினைகள் வரலாம்.
அந்த வகையில், நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சூப்பரான ஃபேஸ் பேக்கை தயாரித்து பயன்படுத்தலாம். இது தொடர்பான பூரண விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
காபி பொடி ஸ்க்ரப்
தேவையான பொருட்கள்
- காபி பொடி- 2 ஸ்பூன்
- தேன்- 1ஸ்பூன்
- ரோஸ் வாட்டர் - சிறிதளவு
காபி ஸ்க்ரப் செய்வது எப்படி?
மேற்குறிப்பிட்ட மூன்று பொருட்களையும் தரப்பட்ட அளவுகளில் எடுத்து பவுளில் போட்டு வைக்கவும்.
பின்னர் காபி பொடி, தேன், ரோஸ் வாட்டர் ஆகிய மூன்றையும் கலந்து பசை போன்ற பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
முகத்திற்கு தடவ முன்னர் முகத்தை நன்றாக கழுவி, அதனை நீர் இல்லாமல் துடைத்துக் கொள்ளவும். அதன் பிறகு, பேக்கை முகத்தில் தடவி சுமாராக 20 நிமிடங்கள் காய விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இப்படி வாரத்திற்கு 3 அல்லது 4 முறை செய்து வந்தால் முகம் பார்ப்பதற்கு இன்ஸ்டன்ட் பொலிவாக மாறி இளமையாக காட்சியளிக்கும். அதில் கலந்திருக்கும் காபி பொடி கண்களைச் சுற்றியிருக்கும் கருவளையங்களும் சுருக்கங்களும் நீங்கும்.
முக்கிய குறிப்பு
ஒவ்வாமை எதுவும் இருந்தால் உரிய மருத்துவரின் பரிந்துரைகளை எடுத்து கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |